Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் சீசன்-4ல் நான் இல்லை : ஷ்ரத்தா தாஸ்

28 ஜூலை, 2020 - 16:48 IST
எழுத்தின் அளவு:
I-am-not-participating-in-Biggboss-says-Shraddha-das

இப்போதிருக்கும் சூழலில் தமிழில் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி நடக்குமா என கேள்விக்கு உள்ளாகி உள்ள நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4-க்கான டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சி, விரைவில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் என யூகங்கள் சோஷியல் மீடியாவில் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டன.

இந்தநிலையில் நடிகை ஷ்ரத்தா தாஸ் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் என்கிற செய்தி வெளியானதால் அதிர்ச்சி அடைந்துள்ளார் ஷ்ரத்தா தாஸ்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஷ்ரத்தா தாஸ், 'இந்த செய்தியில் கொஞ்சமும் உண்மையில்லை.. ஏதோ நான் அக்ரிமென்ட்டில் கையெழுத்து போட்டு விட்டதைப்போல செய்திகள் வெளியாகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை. தயவுசெய்து இதுபோன்ற செய்திகளை வெளியிடாதீர்கள்... பரப்பாதீர்கள்” என கூறியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்துவரும் ஷ்ரத்தா தாஸ் இன்னும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் இரண்டாம் நிலை கதாநாயகியாகவே வலம் வருகிறார். அதனால் தான் இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியுடன் இணைத்து செய்திகளை பரப்ப ஆரம்பித்துவிட்டர்களோ என்னவோ..?

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூதாட்டம் - நடிகர் ஷாம் கைதுசூதாட்டம் - நடிகர் ஷாம் கைது என் கலையுலக கதவுகளை திறந்தவர் - கமல் நெகிழ்ச்சி என் கலையுலக கதவுகளை திறந்தவர் - கமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in