பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
மலையாள திரையுலகை பொறுத்தவரை 50 சதவீத படங்கள் பாடல்கள் இல்லாமலேயே வெளியாவதுதான் வழக்கம்.. மீதிப்படங்களில் கூட படத்திற்கு இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெறும்... ஆனால் தற்போது மோகன்லால் மகன் பிரணவ் நடித்துவரும் ஹ்ருதயம் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம் பெறுகிறதாம்.. இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் என்பதால் தான் இத்தனை பாடல்களாம். ஷான் ரகுமான் இசையில் உருவாகும் இந்த 12 பாடல்களில் ஒன்றை நடிகர் பிரித்விராஜ் பாடியுள்ளார். .
இளம் இயக்குனர்களில் அதிக அளவு ரசிகர்களை கொண்டிருக்கும் இயக்குனர் வினித் சீனிவாசன் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். பிசியான நடிகராக மாறிவிட்டதால் கடந்த நான்கு வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த வினித் சீனிவாசன் தற்போது இந்த 'ஹ்ருதயம்' படம் மூலம் மீண்டும் டைரக்டசனுக்கு திரும்பியுள்ளார். இதற்கு முன்பு வெளியான வினீத் சீனிவாசனின் படங்களைப் போலவே இதுவும் ஒரு பீல் குட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.