காமெடி கதையில் நடிக்கும் அனுஷ்கா | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு | கடுவாவுக்கு யு/ஏ சான்றிதழ் ; சிக்கலின்றி வெளியாகிறது | மாமன்னன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு | அடேங்கப்பா... 800 தியேட்டர்களில் வெளியாகும் 'தி லெஜண்ட்' | மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ் | உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு | டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? |
சூதாட்டத்தில் சிக்கிய நடிகர் ஷாம் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். 12பி, இயற்கை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் ஷாம். கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு சென்னையில் பல நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் இயங்க தொடங்கி உள்ளன.
இந்நிலையில், சென்னையில் கஞ்சா, சூதாட்டம் தங்கு தடையின்றி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கம் ஒன்றின் அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா பிரபலங்களும், தொழில் அதிபர்களும் ரகசிய குறியீடுகள் கொண்டு பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு நடத்திய அதிரடி ரெய்டில் நடிகர் ஷாம் உள்ளிட்ட 13 பேர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.