Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா ஊரடங்கால் தமிழ்நாடு தியேட்டர்களுக்கு ரூ.1500 கோடி இழப்பு

28 ஜூலை, 2020 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Rs.1500-crore-loss-to-Tailnadu-Theatres-owner

கொரோனா தொற்று காரணமாக கடந்த 4 மாதமாக தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூடப்பட்டு கிடப்பதால் தியேட்டர் அதிபர்கள் 1500 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்திருப்பதாக தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால் 4 மாதத்திற்கு மேலாக தியேட்டர்கள் மூடிக் கிடக்கிறது. திரையரங்கு உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தியேட்டர்கள் மூடப்பட்டதான் காரணமாக ரூ.1,500 கோடி இழப்பு வரை ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு திரையரங்கத்துக்கும் ரூ.25 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது. தியேட்டர்கள் பயன்பாட்டில் இல்லாததால் பராமரிப்பு ஏற்படும் நஷ்டமே பல லட்சம் இருக்கும்.

திரையரங்குகளை திறக்க எப்போது அனுமதி வழங்குவார்கள்? என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். திரையரங்கத்தில் ஏதாவது மாற்றம் செய்ய சொன்னால், செய்வதற்கு தயாராக இருக்கிறோம். அரசு விதிக்கும் நிபந்தனை ஏற்று தியேட்டரை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கிறோம். என்கிறார் பன்னீர்செல்வம்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
விஜயலட்சுமி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம்: சீமான் கைதாவாரா?விஜயலட்சுமி மாஜிஸ்திரேட்டிடம் ... சூதாட்டம் - நடிகர் ஷாம் கைது சூதாட்டம் - நடிகர் ஷாம் கைது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
29 ஜூலை, 2020 - 09:56 Report Abuse
PUSHYA  PUTHTHIRN சினிமாவால் ஒரு பங்கு நன்மை என்றால் பல ஆயிரம் பங்கு சமூகம் சீர்கேடு அடைந்துள்ளது. இன்று சினிமா துறை நிழலுலக தாத்தாக்களால் கையில் எடுக்கப்ப் பட்டு விட்டது. நாட்டை அச்சுறுத்தும், நாட்டின் இறையாண்மையையும் , பாதுகாப்பையும், கலாச்சாரத்தையும், அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு பல்லாயிரம் கோடிகள் இறக்கப் படுகின்றன. நடிகர்களின் சம்பளம் வாயைப் பிளக்க வைக்கிறது. இப்போது தெரிகிறதா ஏன் ஹீரோக்கள் நாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் ஏன் மத்திய அரசுக்கு எதிராகவும் சவால் விட்டும் சவுண்டு வீட்டுக் கொண்டும் திரிகிறார்கள் என்று தியேட்டர்கள் எதற்காக?
Rate this:
Prakash - Chennai,இந்தியா
28 ஜூலை, 2020 - 22:04 Report Abuse
Prakash பொதுமக்களுக்கு 1500 கோடி சேமிப்பு. நிரந்தரமாக மூடிவிடுங்கள்.
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
28 ஜூலை, 2020 - 16:56 Report Abuse
Loganathaiyyan அப்போ 2 ரஜினி பட செலவு என்று சொல்லுங்கள்.
Rate this:
thiru - Chennai,இந்தியா
28 ஜூலை, 2020 - 16:29 Report Abuse
thiru அருமையான செய்தி... இனி எப்போதும் திரையரங்கங்கள் வேண்டாம்.. மக்கள் நிம்மதியாகவும் நல்ல வழியில் பணத்தை செலவழிகாட்டும்..
Rate this:
Shanan -  ( Posted via: Dinamalar Android App )
28 ஜூலை, 2020 - 15:09 Report Abuse
Shanan கடவுள் இருக்கிறார் கொஞ்சமா ஆடினார்கள் canteenல்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in