Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயலட்சுமி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம்: சீமான் கைதாவாரா?

28 ஜூலை, 2020 - 12:15 IST
எழுத்தின் அளவு:
Vijayalakshmi-Confessions-to-magistrate-:-seeman-may-be-arrest?

தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் கடந்த பல மாதங்களாக இயக்குனரும், அரசியல் கட்சித் தலைவருமான சீமான் மீது தொடர்ந்து வீடியோக்களில் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். தன்னோடு வாழ்ந்து விட்டு இப்போது தன்னை தவிக்க விட்டுவிட்டதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுதான் எனது கடைசி வீடியோ என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் நான் பிரஷர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்யப்போகிறேன். சீமானும், ஹரி நாடாரும் என் நாக்கை அறுப்போம் என்று மிரட்டுகிறார்கள். நான் செத்தால் அதற்கு இவர்கள் இருவரும்தான் காரணம் என்று கூறினார்.

அதன்பிறகு அளவுக்கு அதிகமாக பிரஷர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். அதில் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை அவர் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாஜிஸ்திரேட் கொடுக்கும் அறிக்கையின் தன்மையை பொறுத்து வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டால் சீமான் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் விஜயலட்சுமி நேற்று வெளியிட்ட வீடியோவில், ''தான் குணமடைந்து வருவதாகவும், தனது தற்கொலைக்கு அரசியல் சாயம் பூச முயற்சி நடப்பதாகவும்'' தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய
வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ்வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ... கொரோனா ஊரடங்கால் தமிழ்நாடு தியேட்டர்களுக்கு ரூ.1500 கோடி இழப்பு கொரோனா ஊரடங்கால் தமிழ்நாடு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (23)

Tamil - chennai,இந்தியா
30 ஜூலை, 2020 - 14:45 Report Abuse
Tamil ஒரு ஒரு மாநிலத்திலும் ஒருத்தர் மேல கேஸ்
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
30 ஜூலை, 2020 - 14:28 Report Abuse
siriyaar சீமான் திராவிட கலாச்சாரத்தை பின்பற்றுவதால் திருமணம் செய்ய மாட்டார்.
Rate this:
rishi - varanasi,இந்தியா
29 ஜூலை, 2020 - 16:32 Report Abuse
rishi பேசி மயக்கி சிரிச்சி சிரிச்சி சின்னாபின்னமாகிட்டு சீன போடுறான் இந்த சீமான். ஒன்னு தப்பிக்கமுடியாது ராஜா வசமா மாட்டிக்கிட்ட
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
29 ஜூலை, 2020 - 13:08 Report Abuse
Tamilnesan ஊர் பஞ்சாயத்தை ஊளையிட்டு பேசும் சீமான், முதலில் தன் பஞ்சாயத்தை தீர்க்கட்டும்.
Rate this:
சோணகிரி - குன்றியம்,இந்தியா
29 ஜூலை, 2020 - 11:21 Report Abuse
சோணகிரி திருமணம் செய்துகொள்ளாமல் கண்ட பெண்களுடன் சேர்ந்து கூத்தடித்துவிட்டு பின்னர் கழட்டிவிடுவது 'நாம் தமிழ'ரின் பண்பாடு போலிருக்கிறது...
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in