Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ்

28 ஜூலை, 2020 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-Ramakrishnan-send-notice-to-Vanitha

பீட்டர்பால் என்பவரை நடிகை வனிதா விஜயகுமார் 3வது திருமணம் செய்து கொண்டது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. ஏற்கெனவே திருமணம் செய்து விவாகரத்து பெறாத ஒருவரை திருமணம் செய்வது சட்டவிரோதம் என்று பலரும் கருத்து சொன்னார்கள்.

நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தரன், யுடியூப் சூர்யாதேவி ஆகியோர் வனிதாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இவர்கள் மீது வனிதா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு யூ-டியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த நேர்காணலின்போது, வனிதா விஜயகுமார் என்னையும், என் கணவரையும் அநாகரிகமான வார்த்தைகளால் தாக்கி பேசியிருந்தார். என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயகுமார் தான், அந்த சேனலை தொடர்புகொண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார். ஆனால் நேர்காணலில் வேண்டுமென்றே அவர் தவறாக பேசினார். பின்னர் அந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து நானும், எனது கணவரும் எங்களது வக்கீல் மூலமாக உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீசு அனுப்பியுள்ளோம். வடபழனி மகளிர் போலீஸ் நிலையம், வடபழனி துணை கமிஷனர் மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் ஆகியோருக்கும் அந்த நோட்டீசின் நகல் அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் அதில் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
104 வயது ஹாலிவுட் நடிகை மரணம்: 2 ஆஸ்கர் விருது பெற்றவர்104 வயது ஹாலிவுட் நடிகை மரணம்: 2 ஆஸ்கர் ... விஜயலட்சுமி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம்: சீமான் கைதாவாரா? விஜயலட்சுமி மாஜிஸ்திரேட்டிடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
30 ஜூலை, 2020 - 05:54 Report Abuse
NicoleThomson வனிதா என்ற இந்த பெண்மணிக்கு இவ்ளோ தெளிவா பிளான் பண்ணி கொடுக்கிற பின்னணியினர் யார்? இதை பற்றி புலனாய்வு செய்வார்களா ஊடகங்கள்?
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
29 ஜூலை, 2020 - 23:14 Report Abuse
Sathish புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் இவள. தொல்ல தாங்க முடியல.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
29 ஜூலை, 2020 - 15:22 Report Abuse
s.rajagopalan எப்படியோ வனிதா பத்திரிகையில் இடம் பிடித்துவிட்டால். சேற்றில் கல்லை எறியாதே என்று சொல்வார்கள். வனிதா 3 லீடிங் ...அந்த பெண்ணரசிஇடம் எச்சரிக்கையா இருக்கணும்
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
29 ஜூலை, 2020 - 13:37 Report Abuse
Ram என்னமா இப்படி பண்ணி டேங்களா
Rate this:
LAX - Trichy,இந்தியா
29 ஜூலை, 2020 - 11:14 Report Abuse
LAX வனிதா விஷயத்துல ஆரம்பத்துலயே தேவையில்லாம மூக்க நுழைச்சு கருத்து சொல்றேங்கற பேர்ல அனாவசியமா பேசிட்டு, அதுக்கு வனிதா பதிலடி குடுத்தவுடன், Sorry கேட்டதோட இந்த விஷயத்த விட்ருக்கணும் Ms.லக்ஷ்மி ராமக்ருஷ்ணன்.. அந்தம்மா எலிசெத்தபெத்தும் லேசுப்பட்ட ஆளில்ல.. 7வருஷமா சும்மா இருந்ததோட இல்லாம, வனிதா தன் திருமண அறிவிப்பை வெளியிட்டப்பவும்.. பூனை மாதிரி வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்துட்டு, இப்போ Ms.லக்ஷ்மி கிட்ட சரணாகதி அடையுறாங்களாம்.. ஏன் இத்தன வருஷமா அவங்களையும் அவங்க Channel மாத்தி Channel நடத்துற நிகழ்ச்சி பத்தியும் தெரியாதா..?
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in