பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் |
ஒரு படத்திற்கு பலகோடி சம்பளம் வாங்குகிறவர் நயன்தாரா. மலையாளத்தில் 50 லட்சம், தமிழில் 2 கோடி, தெலுங்கில் 3 கோடி என்று அவரது சம்பளத்தை பட்டியல் இடுவார்கள். தனது சம்பளத்தை கொண்டு அசையா சொத்துக்களை வாங்கி வருகிறவர் நயன்தாரா.
அந்த வகையில் கடந்த மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் ராவுரியாலா கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஏரி புறம்போக்கை ஒரு கும்பல் ஏமாற்றி விற்பனை செய்துள்ளது. அந்த நிறுவனத்தினடமிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு கோடி கொடுத்து நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி ஆகியோர் வாங்கி உள்ளனர்.
இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடையே எழுந்துள்ள மோதலால் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏரி நிலத்தில் வீடு கட்ட அனுமதி இல்லை. நிலத்தை கையகப்படுத்தி வைத்திருந்த விவசாயிகளிடம் ஏக்கருக்கு 5 லட்சம் கொடுத்து வாங்கி அதனை ஒரு கோடிக்கு விற்று தனது பார்ட்டனர் மோசடி செய்து விட்டதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் சுதிர் ரெட்டி கூறியுள்ளார்.