'டாப் டக்கர்' ஹிட் : மீண்டும் ஹிந்திக்குச் செல்வாரா யுவன் ஷங்கர் ராஜா | 'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ் | ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்கும் அடா சர்மா | தெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா | மார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | பிசாசு -2 படத்தில் விஜய் சேதுபதி | நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை - பிரபு | நதிகளிலே நீராடும் சூரியன் : சிம்பு - கவுதம் பட தலைப்பு | த்ரிஷ்யம்-3 க்ளைமாக்ஸை முடிவு செய்துவிட்ட ஜீத்து ஜோசப் | மகேஷ்பாபு - சுகுமார் ; கசப்புகளை மறக்க வைத்த உப்பென்னா |
கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் இம்மாத தொடக்கத்தில் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆரம்பத்தில் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக் கொண்ட தாயும், மகளும் பின்னர் ஜூலை 17ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த பத்து தினங்களாக சிகிச்சைப் பெற்று வந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யாவுக்கு பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதால், அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனை தனது டுவிட்டர் பக்கம் வாயிலாக அபிஷேக் பச்சன் உறுதி செய்துள்ளார்.
மேலும், தனக்கும், தந்தை அமிதாப் பச்சனுக்கும் இன்னமும் கொரோனா குணமாகவில்லை என்றும், தொடர்ந்து இருவரும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுவருவதாகவும், குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து குணமடைய தொடர்ந்து பிரார்த்தனை செய்துவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அந்தப் பதிவில் அபிஷேக் தெரிவித்துள்ளார்.