'டாப் டக்கர்' ஹிட் : மீண்டும் ஹிந்திக்குச் செல்வாரா யுவன் ஷங்கர் ராஜா | 'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ் | ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்கும் அடா சர்மா | தெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா | மார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | பிசாசு -2 படத்தில் விஜய் சேதுபதி | நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை - பிரபு | நதிகளிலே நீராடும் சூரியன் : சிம்பு - கவுதம் பட தலைப்பு | த்ரிஷ்யம்-3 க்ளைமாக்ஸை முடிவு செய்துவிட்ட ஜீத்து ஜோசப் | மகேஷ்பாபு - சுகுமார் ; கசப்புகளை மறக்க வைத்த உப்பென்னா |
ரஜினி நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்த இப்படத்தில் பேய் பிடித்த நபராக ஜோதிகா நடிப்பில் மிரட்டியிருந்தார்.
தற்போது தங்களது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதை நாயகர்கள் அதிகம் விரும்புகிறார்கள். கமல் இந்தியன் 2வில் நடித்து வருகிறார். எனவே சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ரஜினியே நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நிறைவேறவில்லை. சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். பி.வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.
முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், சந்திரமுகி 2-ம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரி வெப் சீரிஸில் சுய இன்பம் செய்வது போன்று நடித்து மிரட்டிவர் கியாரா அத்வானி. தோனி, கபீர் சிங் உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்தவர்.
தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை லட்சுமி பாம் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளார் லாரன்ஸ். இப்படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி தான் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.