Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவுக்கு முதல் மாத்திரையே இது தான்!

27 ஜூலை, 2020 - 17:05 IST
எழுத்தின் அளவு:
Vishal-advices-firt-medicine-to-Corona

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன் தந்தையைக் கவனித்துக் கொண்டதால், தானும் கொரோனா பாதிப்புக்கு ஆளானார் நடிகர் விஷால். ஆயுர்வேத சிகிச்சை மூலம் தற்போது இருவரும் நலமடைந்துள்ளனர். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் விஷாலே உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் விஷால். அதில், “ஒரு கெட்ட நேரத்தில் இக்கட்டான சூழலில் எப்படி மீண்டு வந்தோம் என்று மற்றவர்களுக்குச் சொல்வதில் எந்த வகையிலும் தவறில்லை. என் தந்தைக்கு முதலில் கொரோனா தொற்று உறுதியானது. நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. நான் எந்தவொரு மருத்துவமனைக்கும் எதிரானவன் அல்ல, ஆகையால் யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

வீட்டிலேயே அப்பாவைக் கவனித்துக்கொண்டேன். அப்பாவைக் கவனித்துக் கொள்ளும்போது, எனக்கும் கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அதிகமான காய்ச்சல், சளி, இருமல் இருந்தது. நான் யாரிடமும் இதைச் சொல்லவில்லை. நான் ஆயுர்வேத மாத்திரை எடுத்துக்கொண்டேன். என்னுடைய மேலாளர் ஹிரிக்கும் கொரோனா அறிகுறிகள் தெரியத் தொடங்கின.

ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டோம். அதன் மூலம் 4 நாட்களில் காய்ச்சல் குறையத் தொடங்கியது. 7 நாட்களில் முழுமையாகக் குணமாகிவிட்டோம். ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணமானேன். இதை ஆயுர்வேத மருந்துகள் விற்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. எங்களை என்ன விஷயம் காப்பாற்றியது என்று சொல்வதற்காகவே இந்த விஷயத்தைப் பதிவு செய்கிறேன். மருத்துவர் ஹரிக்கு எனது நன்றி.

மருத்துவர்களை நான் கடவுளாகப் பார்க்கிறேன். கொரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது வந்துவிடுமோ என்று முதலில் பயப்படாதீர்கள். அதுதான் முதல் மாத்திரை. இந்தப் பயம் மட்டுமே பாதிப் பேரை இக்கட்டான சூழலில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கொரோனாவுக்கு முக்கியமான மருந்தே முதலில் பயப்படாமல் இருப்பது தான். கண்டிப்பாக கொரோனா வைரஸை எதிர்ப்பேன் என்று மன தைரியம் இருக்க வேண்டும். அந்த மன தைரியத்துடன் மருந்துகள் எடுத்துக் கொண்டால், கண்டிப்பாகக் குணமாகலாம்.

அப்படித்தான் 82 வயது நிரம்பிய என் தந்தை குணமானார். அவருடைய மன உறுதியினால் மட்டுமே எனக்கு வந்த தொற்றையும் மன உறுதியுடன் எதிர்கொண்டேன். என் தந்தை, நான், மேலாளர் ஹரி மூவருமே கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு குணமடைந்தோம்.

எங்களால் யாருக்குமே பாதிப்பு இல்லாமல், இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டோம். இந்த வீடியோ எந்தவொரு மருத்துவருக்கோ, மருத்துவத்துக்காகவோ பகிரவில்லை. யாருக்கும் எதிர்ப்பும் தெரிவிக்க இந்த வீடியோவை வெளியிடவில்லை. இன்னொரு மனிதனுக்கு மனிதனாகச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் சொல்கிறேன்”.

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
திருமணம் என்ற வார்த்தையே அச்சம் தருகிறது: பூர்ணாதிருமணம் என்ற வார்த்தையே அச்சம் ... சந்திரமுகி 2 : லாரன்சுக்கு ஜோடி கியாரா அத்வானி? சந்திரமுகி 2 : லாரன்சுக்கு ஜோடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
29 ஜூலை, 2020 - 09:57 Report Abuse
Apposthalan samlin தணிகாசலத்தை உள்ளே பிடித்து போட்டது போல் உங்களையும் உள்ளே பிடித்து போடலாம் எச்சரிக்கை
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
29 ஜூலை, 2020 - 07:54 Report Abuse
skv srinivasankrishnaveni இப்போதும்கூட பல மலையாளிகள் ஆயுர்வேதம் ட்ரீட்மெண்ட்க்குத்தான் முக்கியம் தருவாங்க கெமிக்கல் இலெ என்பதால் மட்டும் இதனை உறுதியாகவே நம்பலாம் மீண்டும் மீண்டும் சொல்றேன் கொரோனா என்பது கடுமையான நிமோனியாவே தான் நுரையீரல் பாதிப்பு தான் கபம் கட்டிண்டு மூச்சுத்திணறலுடன் தோன்றும் நிமோனியா ஆனால் கொரோனாவால் கபம் பிரோசென் ஆயிடுறது அப்போது நுரையீரல் இயக்கம் பாதிக்கும் இதயத்தையும் அமுக்கும் அப்போது இதயத்துடிப்பு நின்றுவிடும் என்பதுதான் பலரும் சொல்றாங்க எப்படிப்பட்ட வியாதிக்கும் ஹோமியோபதி ஆயுர்வேதமலே பூரணகுணம் பெரும் வாய்ப்புகள் அதிகம் அதே சமயம் பக்கவிளைவுகள் இல்லீங்க ஆயுர்வேதம் லே உபயோகம் செய்ரது முழுக்கவே இயற்கை தரும் மூலிகைகளே தான் , சாதாரண சளி இருமluக்கெல்லாம் எங்கள்வீட்டுலே இன்னும் பாட்டி வைத்தியம் தான் மிளகு ஓமம் சுக்கு அதிமதுரம் பனங்கல்கண்டு தான் நாலு மூலிகைகளையும் வருபொடிச்சு கஷாயம் செய்து அதுலே பனங்கல்கண்டு சேர்த்து தொண்டைக்கு இதமான சூடு லே பருகவைப்பாங்க அதேபோல தான் ஹோமியோபதியும் நம்ம ஜனங்களுக்கு பயித்தியம் ஆங்கில மருத்துவமலே என்பதுதான் 100% உண்மை டபால்னு என்ன நடக்கும் போவரபு ல்லா ஊசியாகுத்துவான் வேண்டாத டெஸ்ட்டுகள் பல எடுத்து தனக்கு ஒருமாதம்க்கு தேவையான பணம் கர்ப்பானுக பெரிய ஆசுபத்திரி லே என்றால் கேட்கவேவேண்டாம் ஐஸீ யு லே போட்டு ஆக்சிஜென் செலுத்துவானுக வெண்டிலெட்டர்லேவச்சுட்டு மினிமம் லக்ஷம் வாங்கிண்டு சாரி காண்ட் ஹெல்ப் என்றுபொலம்புவானுக பெற்றபிள்ளையேகூட iculeபோய் பாக்கவேமுடியாது ராமநாசினிமாலே காட்டுறாப்போல ஒருசமயம் எனக்கே ரொம்பவே கொடூரமான மூச்சுத்திணறல் வந்தது கோவைலபெரிய ஆசுபத்திரிலே சேர்த்தாங்க நாலுநாள் ஐ சி யு வாசம் நதிங் ஒன்லி காஸ் ப்ராப்லம்ன்னா விசிலவு ௧௦ஆயிரம் பிறகு காஸ் ப்ராப்லம்ன்னா ஜெலுசில் குடிப்பேன் இல்லியா இஞ்சி யை தட்டி வெண்ணீர்போட்டு குடிப்பேன் மூணுகிளாஸ்லே நான் பிரீ யாகஇருப்பேன் 98%நோ dr
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
28 ஜூலை, 2020 - 17:34 Report Abuse
S. Narayanan பாராட்டப்படவேண்டிய விஷயம். உங்களை போல எல்லோரும் இருந்து விட்டால் கொரோனா நம்மைக்கண்டு பயந்து ஓடிவிடும். வாழ்த்துக்கள்.
Rate this:
samvijayv - Chennai,இந்தியா
28 ஜூலை, 2020 - 09:58 Report Abuse
samvijayv அந்த திருட்டு 'தமிழ் ராக்கர்ஸ்'.,வுடன் இன்னும் நீங்கள் அதே மன தைரியத்துடன் போராடி கொண்டு இருக்கிறீர்களா?.
Rate this:
27 ஜூலை, 2020 - 20:48 Report Abuse
rasheed சார் உங்கள் டிவெட்டர் பதிவு மிகவும் அருமை மன உளைசல் இருக்கும் எங்களுக்கு என் நண்பர்கள் அனைவரும் படித்து தெரியம் வந்தது ஆனால் ஸ்ரீதர் மருத்துவர் என்ன விலை கொடுத்தார் சொல்ல வில்லை இருந்தாலும் உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்க நடிப்பு மற்றும் சண்டை காட்சி இந்த காரோண காலத்தில் பார்த்தேன் ஓய்வு பெற்ற நான் இப்பாடி ஒரு நடிகர் இருப்பது தெரிந்தது பிரமாதம் அந்த கால ஜெய்சங்கர் ஞாபகம் வந்தது ரஷீத் திருப்பத்தூர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in