பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பூர்ணா. மலையாளத்தில் ஷம்னா காசிம் என்ற இயற்பெயரில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரை பெண் பார்ப்பது போல அவரது வீட்டுக்கு சென்ற கும்பல், அவரை நம்பவைத்து ஏமாற்ற பார்த்தது. ஆனால் உஷாரான பூர்ணா, அவர்களை பற்றி போலீசில் புகார் அளித்தார். அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆரம்பத்தில் இந்த விவகாரம் பெண் பார்க்க வந்து மோசடி செய்ய இருந்ததாக தெரிந்த விவகாரம் இப்போது பூர்ணாவை தங்க கடத்தலில் ஈடுபட வைக்க முயன்றது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள பூர்ணா, திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே அச்சமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனக்கு நடனமும் நடிப்பும் தான் உலகம். பெற்றோர்கள் தான் என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி வந்தார்கள். அவர்கள் ஆசைக்காக திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன். குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் நல்ல குடும்பம் போன்று எங்களுக்கு அறிமுமானது அந்த மோசடி கும்பல்.
இருவீட்டார் சம்மதத்தின் பேரில் நான் மணக்கப்போகும் நபருடன் பேசி வந்தேன். எதிர்காலம் குறித்து நிறைய பேசினோம். அவரது போலி அன்பில், அக்கறையில் நானும் கிரங்கிப் போனேன். ஆனால் அவர்கள் போலி கும்பல் என்று அறிந்ததும் மொத்தமாக உடைந்து போனேன். தடுத்து காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி.
இப்போது திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே அச்சமாக இருக்கிறது. யாராது உண்மையான அன்புடன் பேசினாலும் சந்தேகம் கொள்ள வைக்கிறது. யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்று தெரியில்லை. இந்த மனநிலையில் இருந்து என்னை மாற்றிக் கொள்ள நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். எனது பெற்றோரும், சகோதரரும் என்னை பாதுகாத்து வருகிறார்கள். என்கிறார் பூர்ணா.