Advertisement

சிறப்புச்செய்திகள்

இளைஞர்களை டெக்னாலஜி திண்ணப் பார்க்கிறது : விஜய்சேதுபதி பேச்சு | இரண்டு வீடுகளில் உருவான படம் | பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும்: வெற்றி மாறனுக்கு குஷ்பு கண்டனம் | தமிழகத்தில் வெளியாகாத சிரஞ்சீவியின் 'காட்பாதர்' | 'விக்ரம் வேதா' - பழைய டுவீட் டெலிட் செய்து புதிய டுவீட் போட்ட ஹிருத்திக் ரோஷன் | லண்டனில் ராம் படப்பிடிப்பில் சமைத்து அசத்திய மோகன்லால் | சர்ச்சையில் இருந்து மீண்ட நடிகருக்கு சங்கடம் தந்த டைட்டில் போஸ்டர் | கேப்ரில்லாவுடன் காதலா? - உண்மையை போட்டுடைத்த ஆஜித் | 8 வருட காத்திருப்புக்கு பின் கிடைத்த வரம் : நெகிழ்ச்சியில் செந்தில் -ஸ்ரீஜா | 'பிரம்மாஸ்திரா' - 25 நாட்களில் 425 கோடி வசூல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகள்களை மாடாக்கி விவசாயம் : டிராக்டர் அனுப்பிய சோனு சூட்

27 ஜூலை, 2020 - 00:54 IST
எழுத்தின் அளவு:
Sonu-sood-help-to-Andhra-farmer

இந்த ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட பலதரப்பு மக்களுக்கு மிகப்பெரிய அளவிலான உதவிகளை செய்து வருகிறார் பாலிவுட் வில்லன் நடிகரான சோனு சூட். குறிப்பாக ஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை தனது சொந்த செலவில் நூற்றுக்கன பஸ்கள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். நேற்று கூட, மகாராஷ்டிராவில் வயதான மூதாட்டி ஒருவர் சிலம்பம் சுற்றி, அதைவைத்து பிச்சையெடுப்பதை கேள்விப்பட்டு அவரை அழைத்து வந்து பெண்களுக்கான சிலம்ப பயிற்சி பள்ளியை துவங்க ஏற்பாடுகளை செய்து வருகிறார்..

இப்போது லேட்டஸ்ட் தகவலாக விவசாய குடும்பம் ஒன்றுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் சோனு சூட். ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு தன்னிடம் மாடுகள் இல்லாததால் தனது இரண்டு மகள்களையும் ஏரில் பூட்டி நிலத்தை உழுகின்ற வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை கண்டு அதிர்ந்துபோன சோனு சூட், “இவர்களுக்கு சொந்தமாக மாடுகள் கூட இல்லை.. இவர்களுக்கு இப்போது தேவையானது நிலத்தை உழுவதற்கான ஒரு டிராக்டர் தான்.. இன்று மாலைக்குள் அனுப்பி வைக்கிறேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அதன்படி டிராக்டரும் அவர்களின் வீடு தேடி வந்தது. ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும் சோனு சூட்டின் முயற்சியை பாராட்டுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றியின் வித்தியாசம்வெற்றியின் வித்தியாசம் பட்டாம்பூச்சியான ஹன்சிகா பட்டாம்பூச்சியான ஹன்சிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Muraleedharan.M - Chennai,இந்தியா
28 ஜூலை, 2020 - 07:02 Report Abuse
Muraleedharan.M Tractor வந்தாயிற்று. யார் டீசல் போடுவது. மாட்டிற்கு தீனி போட காசுயி்ல்லை. டீசலுக்கு யார் பணம் கொடுப்பது.
Rate this:
ஆம்பள படத்தின் கதை இதுதான்அந்த டிராக்டர் தண்ணீரில் ஓடும் திறன் கொண்டது...
Rate this:
27 ஜூலை, 2020 - 13:23 Report Abuse
Mohammad Nadeem போதும் போதும் ரொம்ப ஓவரா போகுது
Rate this:
prem TRUTH - Madurai ,இந்தியா
27 ஜூலை, 2020 - 10:24 Report Abuse
prem TRUTH உண்மையான ஹீரோ ரட்சகன்
Rate this:
27 ஜூலை, 2020 - 07:11 Report Abuse
ருத்ரா Money யும் மனிதமும் ஒருங்கிணைந்து இருப்பது ஒரு சிலரிடமே. பாராட்டுக்கள் சகோதரரே.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
27 ஜூலை, 2020 - 05:20 Report Abuse
Mani . V வாழ்த்துக்கள் திரு. சோனு சூட். மனிதம் இன்னும் மரணித்துப் போகவில்லை என்பது உங்களை போன்றவர்களால் அறிந்து கொள்ள முடிகிறது. கடவுள் நேரடியாக வந்து உதவ முடியாத சந்தர்ப்பங்களில் உங்களை போன்ற இறை தூதர்கள் மூலம் கடவுள் தனது பணியை நிறைவேற்றுகிறார். “நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்பது உங்களை போன்றவர்களுக்கு பொருந்தும். மீண்டும் எனது வாழ்த்தை தங்கள் பொற்பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
Rate this:
Srini - ,
27 ஜூலை, 2020 - 09:47Report Abuse
Srinivery true...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in