Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி : சீமான் தான் காரணம் என குற்றச்சாட்டு

26 ஜூலை, 2020 - 21:13 IST
எழுத்தின் அளவு:
Actress-Vijayalakshmi-try-to-commits-suicide-:-She-Blames-Seeman

பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். குறிப்பாக தன்னை திருமணம் செய்வதாக சொல்லி நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார். மேலும் சீமான் தன்னுடன் இருந்ததாகக் கூறி சில அந்தரங்க போட்டோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதனாலேயே சீமானின் ஆதரவாளர்கள் இவரை கடுமையாக விமர்சித்து வசை பாடுகின்றனர். அவர்களுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தார்.

இந்நிலையில் விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலைக்கு முன்பாக ஒரு வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விஜயலட்சுமி. அதில் அவர் கூறியிருப்பதாவது : நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். இது எனது கடைசி வீடியோ. சீமானின் ஆதரவாளர்கள் தொடர்ந்து என்னை தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதனால் உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டுள்ளேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் இறந்துவிடுவேன். எல்லாவற்றையும் கடந்து இந்த உலகில் வாழலாம் என எண்ணினேன். ஆனால் இப்போது முடியவில்லை. எனது மரணத்திற்கு சீமான் தான் காரணம். அவரை விட்டு விடாதீர்கள், தப்பிக்கவே கூடாது என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

விஜயலட்சுமியின் இந்த வீடியோ மற்றும் தற்கொலை முயற்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (39) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி ஓவியா சர்ச்சை கருத்துபிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி ஓவியா ... ராகவா லாரன்ஸ் பெருமிதம் ராகவா லாரன்ஸ் பெருமிதம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (39)

Rafi - Riyadh,சவுதி அரேபியா
28 ஜூலை, 2020 - 13:43 Report Abuse
Rafi தற்கொலை என்பது கோழைத்தனம். எதிர்த்தது போராடலாம். இல்லையேல் ஒதுங்கி விடலாம். தலைவரை விரும்புகின்றேன் என்ற போர்வையில் வரம்பு மீறி வசை பாடுவது கண்டிக்கத்தக்கது. அது போன்றவர்களை சட்டப்படி தண்டிக்க முயற்சி செய்தாலே கயவர்கள் ஒளிந்து விடுவார்கள். சமீபத்தில் மத துவேஷ கருத்து வெளியிட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளது, சிலர் தலைமறைவானதும் குறிப்பிட தக்கது.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
28 ஜூலை, 2020 - 12:32 Report Abuse
Sridhar முதலில் கைது செய்ய வேண்டும்.
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
28 ஜூலை, 2020 - 12:05 Report Abuse
S. Narayanan இவருக்கு திருமணம் செய்ய நல்ல ஆன் மகன் கிடைக்கவில்லையா. போயும் போயும் கேடுகெட்ட அரசியல் வாதிகளை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை.
Rate this:
Believe in one and only God - chennai,இந்தியா
28 ஜூலை, 2020 - 11:55 Report Abuse
Believe in one and only God நான் இவளை நம்பிக்கொண்டு தான் இருந்தேன். இப்போ தான் தெரிகிறது இவள் ஒரு ஏமாற்றுக்காரி. பணத்துக்காக நாடகமாடுகிறாள்.
Rate this:
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
28 ஜூலை, 2020 - 11:50 Report Abuse
திராவிஷ கிருமி அந்த அயோக்கியப்பயல் சீமானை தூக்கி உள்ளே வைக்கவேண்டியதுதானே...
Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in