அடுத்தடுத்து வெளிவர உள்ள பெரிய படங்கள் | தலைநகரம் 2 படப்பிடிப்பு நிறைவு | ஹரிஷ் கல்யாணின் டீசல் | பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி | சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அர்ச்சனா | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி | இது சூப்பர் ஜோடி : திரவியும் - ஸ்வாதி ஜோடிக்கு ரசிகர்கள் கமெண்ட் | சிம்பு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனே - நயன்தாரா | மீனாவின் கணவர் மரணம் ; யாரையும் பயமுறுத்த வேண்டாம் : குஷ்பு |
பட்டத்து யானை, சொல்லிவிடவா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐஸ்வர்யா அர்ஜுன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்கிற தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அவரது வீட்டிலேயே தன்னை சுய தனிமை படுத்திக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் தற்போது நோய் தொற்று பாதிப்பிலிருந்து ஐஸ்வர்யா அர்ஜுன் மீண்டு வந்து நலமாக இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அர்ஜுன் கடந்த மாதம் தனது உறவினரும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா என்பவரின் மரணத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தனது குடும்பத்துடன் பெங்களூர் சென்று வந்தார். சிரஞ்சீவி சார்ஜாவின் குடும்பத்தில் அவரது தம்பி துருவ் சார்ஜா மற்றும் அவரது மனைவிக்கு இதேபோன்று கொரோனா தொற்று ஏற்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்புதான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். அங்கு சென்றுவந்த பிறகு தான் ஐஸ்வர்யாவுக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.