விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை ஜெயஸ்ரீ ராமையா.. கடந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார். சில தினங்களுக்கு முன்பு, “நான் இந்த உலகத்தை விட்டுப் போகிறேன்” என்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு நண்பர்களையும் உறவினர்களையும் பதற வைத்தார். இந்தநிலையில் மீண்டும் ஒரு வீடியோவை நேற்று அவர் வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், “நான் சுதீப்பிடம் பொருளாதார உதவி எதையும் கேட்கவில்லை.. பொருளாதார ரீதியாக நான் நன்றாகவே உள்ளேன். ஆனால் என்னால் மன அழுத்தத்தை தாங்க முடியவில்லை.. சிறுவயதில் இருந்தே பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறேன்.. சொல்லப்போனால் நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.. என்னை கருணைக்கொலை செய்துவிடுங்கள்.. இதுமட்டும் தான் நான் இப்போது எதிர்பார்க்கிறேன்.. நான் ஒன்றும் பொன்மகள் அல்ல” என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார் ஜெயஸ்ரீ.
இதைத் தொடர்ந்து அவரது நண்பர்களும் உறவினர்களும் அவரை தொடர்புகொண்டு நலம் விசாரித்து அறிவுரை கூற ஆரம்பித்தனர் இதையடுத்து தான் வெளியிட்ட அந்த வீடியோவை நீக்கிவிட்ட ஜெயஸ்ரீ, “நான் இப்போது நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன்.. உங்கள் அனைவருக்கும் எனது அன்பு” என்று கூறியுள்ளார்.. இந்த கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் உட்பட பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவது நன்றாகவே தெரிகிறது.