இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா | கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன் | தன் செல்லக் குட்டியை விமானத்தில் அழைத்துச் சென்ற கீர்த்தி சுரேஷ் | ஹனிமூனுக்காக நன்றி சொன்ன விக்னேஷ் சிவன் | பிரபாஸின் ‛சலார்' படத்தில் இணைந்த பிருத்விராஜ் |
கடந்த சில நாட்களாகவே நடிகை நக்மாவுக்கும், நடிகை கங்கனா ரணவத்துக்கும் இடையேயான வார்த்தை யுத்தம் தொடர்ந்து வருகிறது. சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து நடிகை கங்கனா பாலிவுட்டில் நிலவும் நெபோடிசம் குறித்து தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார். ஆனால் அந்த நெபோடிசத்தால் தான் கங்கனாவே சினிமாவில் வளர்ந்தார் என்ற குற்றச்சாட்டை சுமத்தினார் நக்மா. அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்கனாவின் சோஷியல் மீடியா குழுவினர், கங்கனா சுயமாகவே வளர்ந்தவர் என்று நக்மாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்ததுடன், இதுபோன்ற பொய் தகவல்களைப் பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என எச்சரித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் கங்கனா தரப்பு விளக்கம் குறித்து கூறியுள்ள நக்மா, “எனது மரியாதையான இந்த முப்பது வருட திரையுலக அனுபவத்தில் கங்கனா மற்றும் அவரது குழுவினரின் செயல்கள் தான் இந்த நெபோடிசத்தைவிட மிகவும் மோசமாக இருக்கின்றன.. இவர்கள் தங்களுக்கு எதிரானவர்கள் பற்றி கூறும் வரம்பு புதிய கருத்துக்களால் எந்த ஒரு பெண்ணையும் தற்கொலை வரை தூண்டி விடுவார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது” என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்