படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் | ஏ.ஆர் ரஹ்மானை ஆனந்த கண்ணீர் விட வைத்த மலையாள சூப்பர் சிங்கர் | ஆஸ்கர் விருது பட நாயகனிடம் ஒப்படைக்கப்பட்ட தர்மபுரி யானைக்குட்டி | ஆதிபுருஷ் மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | டுவிட்டர் சாட்டிங்கில் வந்தியத்தேவனும், குந்தவையும்… | ஒரு பாட்டுக்கு ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா |
பிக் பாஸ் சீசன் ஆரம்பிக்கிறது என்றாலே இவர்கள் தான் போட்டியாளர்கள் எனப் பலரது பெயர்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கி விடும். இந்த வருடம் கொரோனா பிரச்சினையால் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 பற்றி இன்னமும் ஏதும் அறிவிப்பு வரவில்லை.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கில் சீசன் 4ன் டீசர் வெளியானது. நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்கள் யார் என்ற தகவல் வழக்கம் போலவே ரகசியமாக உள்ளது.
எனினும் வழக்கம் போலவே பலரது பெயர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அடிபடத் தொடங்கியுள்ளது. நடிகர் தருண் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக முதலில் ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதனை அவர் சமூகவலைதளம் மூலம் மறுத்து விட்டார்.
இந்நிலையில் நடிகை பூனம் பஜ்வா போட்டியாளராக களமிறங்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வைரலாகியுள்ளது. சமீபகாலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் பூனம் பஜ்வா. அதன் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டில் அவர் கலந்து கொண்டால் கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது என நிகழ்ச்சித் தரப்பு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு ரூ 45 லட்சம் சம்பளாம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. நிகழ்ச்சி தொடங்கும் நாளன்று தான் இது உண்மையா இல்லை பொய்யா என்பது தெரிய வரும்.