துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
நடிகர் ராணா டகுபட்டி, மிஹிகா பஜாஜ் இருவரும் தங்களது காதலை மே மாதம் அறிவித்தார்கள். அதன்பின் இருவீட்டார் இணைந்து திருமணம் பற்றி பேசி முடிவெடுத்தார்கள்.
ஆகஸ்ட் 8ம் தேதி இருவருக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அதிகாரப்பூர்வமாக அவர்களது குடும்பத்தினர் தேதியை அறிவிக்கவில்லை என்றாலும் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.
முதலில் ஐதராபாத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் நடைபெறும் என்றார்கள். அதன்பின் பாதுகாப்பு கருதி ராணாவின் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடக்கும் என்று தகவல் வெளியானது. தற்போது அதிலும் மாற்றம் வந்துள்ளதாம். மீண்டும் அந்த ஓட்டலிலேயே திருமணத்தை நடத்த முடிவெடுத்துள்ளார்களாம்.
அதற்காக மூன்று நாட்களுக்கு அந்த ஓட்டலில் உள்ள அனைத்து அறைகளும் புக் செய்யப்பட்டுவிட்டதாம். திருமணத்திற்காக அழைக்கப்பட உள்ள முக்கிய புள்ளிகள் அங்கு தங்க வைக்கப்படப் போகிறார்களாம். முன்னதாகவே வருமாறு அனைவருக்கும் அழைப்பு என்கிறார்கள்.
இன்றைய தேதியில் இதுதான் ராணா திருமணம் பற்றிய டோலிவுட் அப்டேட். ஆனால், நாளைக்கே வேறு மாதிரி தகவல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு திருமணத்தைப் பற்றிய தகவல்கள் கசியக் கூடாது என நினைக்கிறார்களாம். அதற்கான காரணம் தெரியவில்லை.
இதற்கிடையே ராணா - மிஹிகாவின் டிஜிட்டல் திருமண அழைப்பிதழ் என ஒரு வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் உலா வருகிறது. அதில் மாயாபஜார் படத்தில் வரும் மாயபெட்டியில் இவர்களின் திருமண அழைப்பிதழ் வருவது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையல்ல.