'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
கொரானோ ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதால் இயக்குனர் ராம்கோபால் வர்மா 'கிளைமாக்ஸ், நேக்டு நங்கா நக்னம்' என்ற இரண்டு திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டார். படம் பார்க்கும் ரசிகர்கள் அவை முழு நீளத் திரைப்படங்கள் என நினைத்து பணம் கட்டினால் அவை ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படங்களாகவே இருந்தன. அதிலும் குறிப்பாக 'நேக்டு' என்ற ஆபாசப் படத்தை மிக அதிமாகவே விளம்பரப்படுத்தினார் வர்மா. ஆனால், அது வெறும் 22 நிமிடக் குறும்படமாகவே இருந்தது.
அந்தப் படங்களை அடுத்து இன்று தெலுங்கு நடிகர் பவன் கல்யாணைக் கிண்டலடிக்கும் விதத்தில் 'பவர் ஸ்டார்' என்ற படத்தை வெளியிட்டார். அப்படத்தை இன்று காலை 11 மணிக்கு முன்னதாக புக்கிங் செய்து பார்த்தால் 150 ரூபாய் கட்டணம் எனவும் அதற்குப் பின்னர் பார்த்தால் 250 ரூபாய் கட்டணம் எனவும் பில்ட்அப் கொடுத்தார்.
படம் வெளியானபின்தான் தெரிந்தது அது வெறும் 27 நிமிடப் படம் என்று. அதிலும் டிவிக்களில் வரும் காமெடி நிகழ்ச்சி போல 'ஸ்பூப்' வகையிலான படமாம். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் பவன் கல்யாணை வெறுப்பேற்றவே வர்மா இப்படி செய்திருக்கிறார் என ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள். அதே சமயம் வழக்கம் போல படம் சூப்பர் ஹிட் என சொல்லி வருகிறார் வர்மா.