பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
'தில் பேச்சரா' நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
சினிமா வாரிசு அரசியல் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளாக கடும் மன அழுத்தத்தில் சுஷாந்த் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரிசு அரசியல் பற்றி பலரும் பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
ஹிந்தி நடிகையான கங்கனா ரணவத் மட்டுமே அது பற்றி அடிக்கடி கடுமையான வாதங்களை முன் வைத்தார். அதனால் கங்கனா மீதும் பலரும் விமர்சனங்களை வைத்தார்கள். வாரிசு அரசியல் காரணமாகத்தான் பல நடிகர்கள், நடிகைகளுக்கு எந்த சினிமா விருது வழங்கும் நிகழ்விலும் அதிக விருதுகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவார்டுகள் குறித்து தமன்னா பேசியுள்ளார். “விருதுகளுக்காக நான் பலமுறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளேன். ஆனால், ஒரு சில விருதுகள் மட்டும்தான் கிடைத்துள்ளது. அவையெல்லாம் நமது நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் ஆதரவளிப்பதை மாற்றிவிடாது என்பதை உணர்ந்து கொண்டேன். நாம் நடிக்கும் படங்கள் நன்றாக ஓடினால், அதில் நமது நடிப்பு சிறப்பாக அமைந்தால் வேறு எதுவுமே தேவையில்லை,” என்று தெரிவித்துள்ளார்.