விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
சமீபத்தில் இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரின் தற்கொலைக்கு பாலிவுட் திரையுலகில் நிலவும் நெபோடிசம் என்கிற வாரிசு அரசியலின் ஆதிக்கம் தான் காரணம் என்று கூறி இயக்குனர் கரண் ஜோஹர், சல்மான்கான், ஆலியா பட் உள்ளிட்டவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகை கங்கனா ரணவத்.
இந்தநிலையில் நடிகையும், தற்போதைய அரசியல்வாதியுமான நக்மா, தனது டுவிட்டர் பக்கத்தில் கங்கனா குறித்து கிண்டலாக குற்றச்சாட்டு கூறியுள்ளார். குறிப்பாக நெபோடிசம் என யாரை குற்றம் சாட்டுகிறாரோ அவர்களாலேயே திரையுலகில் வளர்ந்தவர் தான் கங்கனா தீதி என அழுத்தமான உதாரணங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கங்கனா சினிமாவில் அறிமுகமானது ஆதித்யா பஞ்சோலி (நெபோடிசம்) மூலமாகத்தான். கங்கனாவின் பாய்பிரண்ட்டான இவர் தான் இயக்குனர் அனுராக் பாசுவிடம் கங்கனாவை அறிமுகப்படுத்தினார்... கேங்ஸ்டர் படம் மூலம் இவரை அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் மகேஷ் பட் (நெபோடிசம்).. கங்கனாவின் முதல் ஹீரோவாக நடித்தவர் இம்ரான் ஹாஸ்மி (நெபோடிசம்). கங்கனாவின் திரையுலக பயணத்தில் சரிவு ஏற்பட்டபோது இவருக்கு தனது கைட்ஸ் படம் மூலம் கைகொடுத்தவர் ஹ்ரித்திக் ரோஷன் (நெபோடிசம்).. மீண்டும் ஒரு சரிவு ஏற்பட்டபோது மீண்டும் 'க்ரிஷ்-3' மூலம் கை கொடுத்தவரும் ஹ்ரித்திக் ரோஷன் (நெபோடிசம்) தான்.. கங்கனாவின் மேனேஜராக இருப்பது கூட அவரது சகோதரி ரங்கோலி.. இதுவும் நெபோடிசம் தான்.
சுஷாந்த்தின் மரணத்துக்கு முன்பாக அவருக்கு உதவியதோ இல்லை, அவருடன் பேசியதோ கூட இல்லாத கங்கனா, அவரது மறைவுக்குப்பின் தனது சொந்த காரணங்களுக்காக எதிர்க்கும் பலரையும் நெபோடிசம் என்கிற பெயரில் விமர்சித்து வருகிறார். மொத்தத்தில் கங்கனா தீதி ஒரு நயவஞ்சகி” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் நக்மா.