Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீவித்யா பிறந்த நாள்: அதிசய ராகம், அபூர்வ ராகம்

24 ஜூலை, 2020 - 10:30 IST
எழுத்தின் அளவு:
Actress-Srividya-Birthday-today

பிரபல கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் தான் ஸ்ரீவித்யா. அம்மா சங்கீதத்தில் சாதித்தார். மகள் நடனத்தில் சாதித்து நடிகை ஆனார். 40 ஆண்டுகள், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 800க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். என்ன தான் சினிமாவில் பிரபல நடிகையான வாழ்க்கை வாழ்ந்தாலும் அவரது அக வாழ்க்கை சோகமாகவே இருந்தது.

ஸ்ரீவித்யாவின் பெரிய கண்களும், அவருடைய நடனமும் அவரை வெறும் கதாநாயகியாக மட்டுல்லாமல் திறமையான குணச்சித்திர நடிகையாகவும் மாற்றியது. அபூர்வ ராகங்கள் படத்தில் 20 வயதுப் பெண்ணுக்கு தாயாக நடித்திருந்தது மட்டுமல்ல 22 வயது பையனை காதலிப்பவராகவும் துணிந்து நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்தபோது தன்னைவிட வயதில் இளையவரான கமல்ஹாசனை அவர் காதலித்ததாக அப்போதைய கிசுகிசுக்கள் உண்டு. கமல் மீது எப்போதும் அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரை பற்றி பேசும்போதெல்லாம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக இருப்பார் என்பார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் மரண படுக்கையில் அவர் கிடந்தபோது அவர் கடைசியாக சந்திக்க விரும்பிய நபர் கமல்ஹாசன். அவரும் கேரளாவுக்கு சென்று அவரை சந்தித்துவிட்டு வந்தார். அவர் திரும்பிய 3வது நாளில் ஸ்ரீவித்யா காலமானார்.

இப்படி பல விஷயங்கள் ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையில் உண்டு. இன்றைய இளம் தலைமுறை அவரை வயதான தோற்றத்தில் திரையில் பார்த்திருப்பார்கள். ஆனால் கருப்பு வெள்ளை காலத்தில் அவர் எப்படி இருப்பார் என்பதை கண்ணதாசனின் இந்த வரிகள் சொல்லும்.

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்.
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
புதிய தொழில் : சைவத்தை அசைவமாக்கும் ஜெனிலியாபுதிய தொழில் : சைவத்தை அசைவமாக்கும் ... வரலட்சுமியின் டேனி கதை இது தான் வரலட்சுமியின் டேனி கதை இது தான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Muraleedharan.M - Chennai,இந்தியா
31 ஜூலை, 2020 - 06:48 Report Abuse
Muraleedharan.M சிறந்த நடிகை
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27 ஜூலை, 2020 - 16:55 Report Abuse
skv srinivasankrishnaveni பெஸ்ட் அல்வெஸ் பெஸ்ட் என்று சொல்லுவேன் அவலொபிடிக்கும் தீர்க்கமான அழகு என்று சொல்லுவாள் அதுபோல சிறந்த அழகி பேசும் கண்களைஏன் இன்ஸ்யூர் செய்யலே என்பேன் அவ்ளோஅழகிய பெரிய கவிதைபாடும் அழகிய விழிகள் அவர் அம்மா எனக்கு அபிமானம் நான் இறுதிவரை எம் எல் வி அம்மாவின் ரசிகை தான் இன்ன ராகம் என்று இல்லே எதையும் அவ்ளோ அழகா பாடுவார் ஒருமுறை ஸ்ரீ வித்தியாவின் லேமுழுகாச்சரிக்கெட்டேன் ஆஹா எவ்ளோ அழகான குரல்வளம் மறக்கவேமுடியாது பத்மினி அழகு ஒருவிதம் ஸ்ரீ வித்யா வின் அழகு லக்ஷ்மீகரம் டிட்டோ அப்படியே அவள் தன் அப்பாவின் சாயல்தான் (விகடம் கிருஷ்ணமூர்த்தி)கேஷுவலா நடிப்பாங்க அபூர்வ ராகம் லே ரஜினிக்கு மனைவி (அப்போது நேக்கு ரஜனி பிடிக்காது (ஹஹ்ஹாஹ்)ரஜினிக்கா இந்தப்பொண்ணு மனைவி என்று எரிச்சலவந்தது ஒரு மூவிலே ரஜினிக்கு அம்மா திங்க் தளபதி அழகே இல்லேன்னாலும் ஹீரோன்னா 70 வயசுக்கும் ஹீரோ வயசு ஏறினாலோ பொண்ணுகள் மட்டுமே அம்மா அன்னி அக்கான்னு வரணுமோ என்று கோவம் வரும் ஆனால் நாயகி யாவும் அழகு வில்லியாக வருவா அதுலேயும் அழகா இருந்தா சிறந்த நடிகை ஆனால் அவள் வாழ்க்கை மஹாபாவம் ன்று இப்போதும் எண்ணுவேன் விசுவுக்கு ஜோடியாக வருவா பக்கத்துபோர்ஷனிலே இருக்கும் நபர்கள் ஜவாபேசுவதைஒட்டுகேட்க்கும்போது விசு ஒருகலாட்டா செய்வாரு அந்த தம்பதிகள் அடிச்சுன்னுஇருக்கும்போது தன்மனைவியிடம் பேசுகாட்ச்சி ஆஹா சூப்பரோ சூப்பர்
Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
26 ஜூலை, 2020 - 21:36 Report Abuse
Lion Drsekar என் வாழ்வில் மறக்க முடியாத அந்த நாட்கள், நான்கு நாள் இந்த பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது, நான் ஸ்ரீவித்தியாவுக்கு மிருதங்கம் இந்த பாடுகளுக்கு மிருதங்கம் வாசித்தேன், இடைவேளை மற்றும் மற்ற நேரங்களில் பல ராகங்கள் பாடுவார், கடம் வித்துவான் திரு பாலக்காடு சுந்தரம் அவர்கள் வாசித்தார், அவர் இவரது தாயாருக்கு கடம் வாசிக்கும் பெரிய வித்வான், அவருடன் மோரா என்று கூறுவார்கள் அந்த கணக்குகளை கூறி பல காலங்களில் அவரிடம் பயில்வார், யார் யார் வருகிறார்களோ அவர்களுடன் அவர்கள் கலைகளை அறிந்து தெரிந்து கொண்டு பழகும் குணம் கொண்டவர், திரு கே பி , நாகேஷ் அவர்கள் எங்களுடன் சேர்ந்து பழகிய அந்த நாட்கள் என்றென்றும் பசுமையாக இருக்கிறது, குழந்தை உள்ளம் கொண்ட இவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக, வந்தே மாதரம்
Rate this:
24 ஜூலை, 2020 - 21:45 Report Abuse
rasheed வித்யா வரலாறு அவர்கள் ஒரு தேவதை சிறந்த நடிகை
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
24 ஜூலை, 2020 - 15:27 Report Abuse
Bhaskaran காரைக்கால் அம்மையார் படத்தில் சிவசக்தி தாண்டவம் மிக அருமையாக ஆடியிருப்பார் .அதைபோல் வேறு ஒரு நாட்டியம் இன்னும் திரைப்படத்தில் வரவில்லை
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in