Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - கடலோர கவிதைகள்

23 ஜூலை, 2020 - 19:50 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-Kadalora-Kavithaigal

படம்: கடலோர கவிதைகள்
வெளியான ஆண்டு : 1986
நடிகர்கள் : சத்யராஜ், ரேகா, ராஜா, ஜனகராஜ், கமலா காமேஷ்
இயக்குனர் : பாரதிராஜா
தயாரிப்பு : மூகாம்பிகா ஆர்ட் கிரியேஷன்ஸ்

குடை பிடித்து வரும், ஜெனிபர் டீச்சரையும், முரடன் சின்னப்பதாசையும் மறக்க முடியுமா? ஒரு எளிய முக்கோண காதல் கதை தான், கடலோர கவிதைகள். ஆனால், கடற்கரையை பின்புலமாக கையாண்டு, அழகாக பின்னப்பட்டிருந்தது. கதாபாத்திரங்கள், இயல்பு மீறி நடிக்கவில்லை.

ராஜேஷ்வரின் கதைக்கு, ஆர்.செல்வராஜ் வசனம் எழுத, திரைக்கதை அமைத்து இயக்கினார், பாரதிராஜா. பி.கண்ணனின், ஒளிப்பதிவும்; திருநாவுக்கரசின், எடிட்டிங்கும் படத்திற்கு பலம் சேர்ந்தன.

வயல்வெளிகளிலும், நகரத்திலும் சுழன்ற பாரதிராஜாவின் கைகள், இப்படத்திற்காக, கடற்கரை பக்கம் திரும்பியது. இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த முட்டம் கடற்கரை, சுற்றுலா தலமாக மாறியது.

ரேகாவும், ராஜாவும், இப்படத்தில் தான் அறிமுகமாகினர். சத்யராஜின் திரை வாழ்க்கையில், திருப்புமுனையை அமைத்துக் கொடுத்தது, இந்த படம். வில்லனா இருந்த சத்யராஜை, இப்படத்தில் மூலம், கதாநாயகனாக மக்கள் ஏற்றுக்கொண்டனர். படம், 200 நாட்களைக் கடந்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

இளையராஜாவைப் பற்றி என்ன சொல்ல... வழக்கம்போல, பாடல்களில் பட்டையை கிளப்பியிருந்தார். 'அடி ஆத்தாடி, கொடியிலே மல்லிகைப் பூ, பொடிநடையா போறவரே, போகுதே போகுதே...' இன்றும், நேயர் விருப்பமாக இருக்கின்றன.

இத்திரைப்படம், சிரஞ்சீவி, சுஹாசினி நடிப்பில், ஆராதனா என தெலுங்கிலும்; பி.சி.பாட்டீல், பிரேமா ஆகியோர் நடிப்பில், கவுரவா என, கன்னடத்திலும், 'ரீமேக்' செய்யப்பட்டது. சினிமா ரசிகர்களால் வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது, கடலோர கவிதைகள்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? -  ஊமை விழிகள்மறக்க முடியுமா? - ஊமை விழிகள் மறக்க முடியுமா? -  புன்னகை மன்னன் மறக்க முடியுமா? - புன்னகை மன்னன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in