Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இ--பாஸ் சர்ச்சை : ரஜினிக்கு மட்டும் சலுகை?

23 ஜூலை, 2020 - 19:40 IST
எழுத்தின் அளவு:
Rajini-facing-under-E-Pass-issue?

கொரோனாவை தடுக்க இ--பாஸ் பெறும் வழிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிக்கு மட்டும், சென்னையில் இருந்து கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்று வர, மருத்துவ அவசரம் என்ற காரணத்தில் பாஸ் கொடுத்தது சர்ச்சையாகியுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல, இ--பாஸ் பெறுவது கட்டாயம். இறப்பு, மிகவும் முக்கியமான மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்கு மட்டுமே இ--பாஸ் தரப்படுகிறது. அதேப்போல் மற்ற மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கும் இ--பாஸ் தரப்படுகிறது. ஆனால், சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல, இ--பாஸ் சாதாரணமாக தரப்படாத நிலையில், ரஜினிக்கு, இ--பாஸ் கொடுத்தது சர்ச்சையாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் காரில் சென்னையிலிருந்து கேளம்பாக்கம் சென்ற ரஜினி, இ--பாஸ் பெற்றாரா? என்பது கேள்வியான நிலையில், தற்போது, சென்னை போயஸ் கார்டனிலிருந்து கேளம்பாக்கம் விடுதிக்கு ரஜினி காரில் சென்று வர நேற்று இ--பாஸ் பெற்றுள்ளார். மருத்துவ அவசரம் என காரணம் கூறி இ--பாஸ் பெறப்பட்டுள்ளது.

காரை தானே ஓட்டிச் செல்லும் நிலையில் உள்ள ரஜினிக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படாத நிலையில், பொய்யான காரணத்திற்காக இ--பாஸ் கொடுத்தது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு மட்டும் சலுகை தரப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
அத்துமீறி ஏரியில் மீன்பிடிப்பு - விமல், சூரிக்கு அபராதம்அத்துமீறி ஏரியில் மீன்பிடிப்பு - ... பிரபலமாக வழி என்ன? பிரபலமாக வழி என்ன?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

Arun - Thanjavur,இந்தியா
24 ஜூலை, 2020 - 15:26 Report Abuse
Arun இ பாஸ் நடைமுறையில் மொத்தம் 6 முறையில் தான் அனுமதி வழங்க படுகிறது. அதில் ரஜினி அவர்களுக்கு மெடிக்கல் emergency மட்டுமே பொருந்தும். அதில் மருத்துவ ஆலோசனை பேரில் சுத்தமான இடங்களுக்கு சென்று ஓய்வு எடுப்பது, உடற்பயிற்சி செய்வதும் அடங்கும். அதே போல் உதயநிதி தூத்துக்குடி சென்ற இ பாஸ் எப்பொழுது வெளியிடப்படும். கே ஸ் அழகிரி பெங்களூரு சென்ற இ பாஸ் வெளியிடப்படுமா? உதயநிதி பண்ணை வீட்டுக்கு செல்வது இ பாஸ் பெற்று தானா? இதற்க்கு திமுகவின் பதில் என்ன? அதே போல் மூல பாத்திரம் எப்பொழுது வெளியிடப்படும்?
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
24 ஜூலை, 2020 - 10:14 Report Abuse
தல புராணம் ஆன்மீக அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. ஆனா இதுக்கு அடிமை மற்றும் சங்கிகளின் முட்டுக்கொடுக்கும் அழகு அபாரம்.. "செஞ்சது தப்பு". அதை சொன்னா, "ஆமா தப்பு பண்ணிட்டேன், அதுக்கான தண்டனையை ஏத்துக்குறேன்" னு சொல்றவன் ஒரு மனிதன்.. ஆனா, இவனுங்க கூவல்? "அவனும் தான் தப்பு பண்ணான். அவனை கேட்டீங்களா"? ன்னு நேருவிலிருந்து ஆரம்பிக்கிறானுங்க.
Rate this:
24 ஜூலை, 2020 - 09:14 Report Abuse
Murphys Law if he went without epass, anyone has guts to file file case against him? useless debate.
Rate this:
samvijayv - Chennai,இந்தியா
24 ஜூலை, 2020 - 08:56 Report Abuse
samvijayv e-pass இல்லாமல்., சென்னையில் இருந்து சாத்தான்குளம் சென்று வந்தார்கள் அல்லவா ஓர் சில தி.மு.க., நிர்வாகிகளை போல்.
Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
24 ஜூலை, 2020 - 08:17 Report Abuse
தமிழ் மைந்தன் ஒருவேளை சாத்தான்குளத்துக்கு கனிமொழி பெற்ற அதே ரூட்டில் இவரும் பாஸ் பெற்றிருப்பாரோ?....
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in