Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவுக்கு சர்ப்பிரைஸ் பரிசு..! - மிரட்டும் வாடிவாசல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

23 ஜூலை, 2020 - 15:16 IST
எழுத்தின் அளவு:
Vaadivasal-first-look-released-:-Surprise-to-Suriyas-birthday-gift

சூரரைப்போற்று படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இப்படத்தை வீ கிரியேஷன்ஸ் எஸ். தாணு தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.

தனுஷ் நடிப்பில் மாபெரும் ஹிட்டான அசுரன் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தியது என்ற தகவலால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் பின்புறம் ஜல்லிக்கட்டுக் காளைகள் போன்ற சிற்பங்கள் இருக்க, கிராமத்து லுக்கில் கழுத்தில் தாயத்துடன் மிரட்டலாக சூர்யா இருக்கிறார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பிரச்சினை தீர்ந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




காட்டுப்பயலே பாடல் வெளியீடு
இது தவிர முன்னமே அறிவிக்கப்பட்டபடி, சூரரைப் போற்று படத்திலிருந்து காட்டுப்பயலே பாடல் ஒரு நிமிட வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். பாடல் வரிகளும் சரி, வீடியோ காட்சிகளும் சரி கொஞ்சம் முரட்டு காதலாகவே அமைந்துள்ளது. தெலுங்கிலும் இப்பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சுதா கொங்காரா இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
இரட்டை ரோஜா - ஷிவானிக்கு பதில் சாந்தினிஇரட்டை ரோஜா - ஷிவானிக்கு பதில் ... வனிதா விவகாரம் - கைதான சூர்யா தேவி ஜாமினில் விடுவிப்பு வனிதா விவகாரம் - கைதான சூர்யா தேவி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26 ஜூலை, 2020 - 04:45 Report Abuse
J.V. Iyer எல்லோரும் உண்மையை திரித்து, ஹிந்துக்கள் மனத்தை புண்படுத்தி பணம் பண்ண நினைக்கிறார்கள். ஹிந்துக்கள் இப்போது விழித்து எழுந்துவிட்டார்கள்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25 ஜூலை, 2020 - 04:33 Report Abuse
NicoleThomson இதிலும் டீபால்ட் அதே எக்ஸ்பிரஷன்
Rate this:
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் ,இந்தியா
24 ஜூலை, 2020 - 12:34 Report Abuse
கருப்பட்டி சுப்பையா எப்படியும் மாட்டின் கொம்பு எட்டாது இவனுக்கு. கையில கிடைச்சது பிடிச்சிட்டு தொங்கிகிட்டே போவான்.
Rate this:
யார்மனிதன் - Toronto,கனடா
23 ஜூலை, 2020 - 21:29 Report Abuse
யார்மனிதன் இதுல என்ன மிரட்டுதுன்னு தெரில.கக்கா போய் நாலுநாள் அதுமாதிரி முழிக்கிறான் இது மிரட்டுத்தா?
Rate this:
23 ஜூலை, 2020 - 21:01 Report Abuse
ilaiyaraja muthu worst look... not first look
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in