துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா | ஓடிடி-யில் வெளியாக உள்ளதா மாஸ்டர்? |
பிரபல நடிகையும், மறைந்த கன்னட நடிகர் அம்பரீசின் மனைவியும், மண்டியா தொகுதி எம்.பியுமான சுமலதாவுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமலதா, கொரோனாவில் இருந்து மீண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை மறுத்த சுமலதா, தான் இன்னும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருந்தார்.
தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நான் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனையால்தான் நான் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளேன். இந்த 3 வார கால கட்டாய தனிமையை மன வேதனையுடன் அனுபவித்து முடித்து உள்ளேன்.
தற்போது எனக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு வைரஸ் தொற்று இல்லை என்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி ஒரு வாரம் வீட்டில் ஒய்வெடுக்க உள்ளேன். விரைவில் மக்கள் பணிக்கு திரும்புவேன். என சுமலதா கூறியுள்ளார்.