Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வனிதா டுவிட்டரை விட்டு வெளியேற நயன்தாரா தான் காரணமா?

22 ஜூலை, 2020 - 16:40 IST
எழுத்தின் அளவு:
Did-Vanith-quit-twitter-beacuse-of-Nayanthara

கடந்த சில வருடங்களாக இந்த மாதங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவது வழக்கம். சிலர் தங்கள் வீட்டு பிரச்சினைகளை மறந்து பிக்பாஸ் வீட்டு பிரச்சினைகளைப் பற்றிப் புறணி பேச ஆரம்பித்து விடுவார்கள். இந்த வருடம் கொரோனா பிரச்சினையால் பிக்பாஸ் சீசன் 4 இன்னமும் ஆரம்பமாகாத நிலையில், சிலருக்கு நல்ல கண்டெண்ட் கொடுத்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

கடந்த மாதம் அவர் பீட்டர் பாலைத் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்ததில் இருந்தது ஆரம்பித்தது புதிய தலைவலி. திருமணத்தின் போது உதட்டு முத்தம் கொடுத்துக் கொண்டது பெரும் சர்ச்சையாகி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியானது. இது ஒருபுறம் இருக்க பீட்டர்பாலின் முதல் மனைவி கொடுத்த புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதோடு வனிதா திருமணத்தை ஒருசில பிரபலங்கள் விமர்சனம் செய்ய, அவர்களுக்கு வனிதா டுவிட்டரிலும், வீடியோ பதிவாகவும் பதிலடி கொடுக்க என அடுத்தடுத்து ஊடகங்களில் இந்தப் பிரச்சினைப் பேசப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் கோபத்தில் டுவிட்டரில் இருந்தே வெளியேறினார் வனிதா.

நடிகை கஸ்தூரியுடனான சண்டைக்குப் பிறகே இந்த முடிவை அவர் எடுத்ததாக முதலில் கருதப்பட்டது. கஸ்தூரியும், 'பயந்துட்டியா குமாரு' என்றெல்லாம் கிண்டல் செய்தார். ஆனால், வனிதா டுவிட்டரில் இருந்து அவசர அவசரமாக வெளியேற நயன்தாரா தான் காரணம் என்ற புதிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

வனிதா திருமணம் குறித்து சமீபத்தில் ஒரு டுவீட்டைப் பதிவு செய்திருந்த லட்சுமி ராமகிருஷ்ணன், அதில், 'எல்லோரும் எலிசபெத் ஹெலனுக்கு சப்போர்ட் செய்யுங்கள்' என ஒரு ஹேஷ்டேக்கையும் சேர்த்திருந்தார். இந்த ஹேஷ்டேக் குறித்து கருத்து கூறிய ஒரு டுவிட்டர் பயனாளி, 'இதற்கு முன்னர் நயன்தாரா, பிரபுதேவாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருந்தபோதிலும் நயன்தாரா அவருடன் ரெலேஷன்ஷிப்பில் இருந்ததை ஏன் யாருமே கேள்வி கேட்க வில்லை' என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த டுவீட்டை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட வனிதா, 'இதற்கு பதில் சொல்லுங்கள்' என லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டேக் செய்திருந்தார். மேலும் இந்த விஷயத்தில் என்னை குற்றஞ்சாட்டியவர்கள் நயனை ஏன் எதுவுமே சொல்லவில்லை எனவும் அவர் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த நயன்தாரா ரசிகர்கள், ' நயன்தாராவுடன் பிரபுதேவா ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னரே நயன்தாராவை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், விவகாரத்துக்கு அவர் விண்ணப்பம் செய்திருந்ததாகவும், உங்களை போல் அவர் விவாகரத்து பெறுவதற்கு முன்னரே திருமணம் செய்யவில்லை' என்றும் பதிலடி கொடுத்தனர். மேலும் பிரபுதேவா தனது சொந்த வாழ்க்கை குறித்தும் ரிலேஷன்ஷிப் குறித்து தானே வீடியோ வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் கோபமாக பதிவுகளை வனிதாவுக்கு எதிராக வெளியிட்டனர்.

ஏற்கனவே பல வகைகளில் தான் விமர்சனத்திற்கும், கேலி, கிண்டலுக்கும் ஆளான நிலையில் எதிர்பாராத இந்த நயன் ரசிகர்களின் டுவீட்டும் சேர்ந்து கொண்டதால் இருக்கும் பிரச்சினையில் இது வேற புதுப் பிரச்சினையா என டுவிட்டரில் இருந்து வனிதா வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியணும் - கந்தனுக்கு அரோகரா : ரஜினிமதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ... தாத்தாவாகிறார் விக்ரம்! தாத்தாவாகிறார் விக்ரம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

meenakshisundaram - bangalore,இந்தியா
25 ஜூலை, 2020 - 15:20 Report Abuse
meenakshisundaram வனிதா தனது மகள்களுக்கு இதனால் ஏதேனும் செய்தி கூற வருகிறாரா? இல்லை தனது அப்பாவுக்கு செய்தி சொல்கிறாரா ?தெரியலையே
Rate this:
தங்கை சிவா, TZR ( ஜூரோங் வெஸ்ட், சிங்கப்பூர், ) ஆமா
Rate this:
LAX - Trichy,இந்தியா
23 ஜூலை, 2020 - 10:27 Report Abuse
LAX Well said Mr./Ms. Ana..
Rate this:
ana -  ( Posted via: Dinamalar Android App )
22 ஜூலை, 2020 - 19:06 Report Abuse
ana இந்த ஒரு பெண்ணை போட்டி போட்டுக் தக்கீறீங்களே எவ்வளவு தான் தாங்குவா அவள் இப்படி பேசுவற்கு நீங்கள் அனைவரும் தான் காரணம் முதலில் அந்த தயாரிப்பாளாரை வாயை மூட சொல்ல அறிவுரை வழங்கிகள் இது அவளுடைய தனிப்பட்ட விஷயம் . இதில் யாருக்கும் தலையிட உரிமை இல்லை.
Rate this:
ana -  ( Posted via: Dinamalar Android App )
22 ஜூலை, 2020 - 19:06 Report Abuse
ana இந்த ஒரு பெண்ணை போட்டி போட்டுக் தக்கீறீங்களே எவ்வளவு தான் தாங்குவா அவள்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in