Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியணும் - கந்தனுக்கு அரோகரா : ரஜினி

22 ஜூலை, 2020 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Kandhasasti-kavasam-issue-:-Rajinis-tweet

கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பியது தொடர்பாக, டுவிட்டரில் கோபமான பதிவை ஒன்றை போட்டுள்ளார் ரஜினி. அதில் இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும் என பதிட்டுள்ளார்.

கருப்பர் கூட்டம் எனும் யு-டியூப் தளத்தில் இந்து மதத்தையும், இந்து மத கடவுள்களையும் இழிவுப்படுத்தி வீடியோக்கள் பதிவிடப்பட்டு வந்தது. அதில், கடவுள் முருகனை கோடாடி கோடி மக்கள் தினமும் துதிக்கும் கந்த சஷ்டி கவசத்தை இழிப்படுத்தி வீடியோ பதிவிட்டது இந்து மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்து மத தலைவர்கள், ஆன்மிக பெரியவர்கள், பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அந்த யு-டியூப் சேனல் நிர்வாகிகளான சென்னை, போரூரை சேர்ந்த சுரேந்தர் நடராஜன் உட்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த தளத்தில் இருந்த 500க்கும் மேற்பட்ட வீடியோக்களும் நீக்கப்பட்டன.

இந்த விஷயத்தில் பல நடிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் எதிர்கால அரசியலில் களமிறங்க இருப்பவரும், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட ரஜினி எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார். இதுகுறித்த செய்தி கூட தினமலரில் வந்தது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு பின் டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

ரஜினி வெளியிட்ட டுவீட், ''கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி, கொந்தளிக்க செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும்.

எல்லா மதமும் சம்மதமே! கந்தனுக்கு அரோகரா!!

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஜப்பானில் 1 மில்லியன் டாலர் வசூலித்த சாஹோ - ஆனாலும் ரஜினி தான் டாப்!ஜப்பானில் 1 மில்லியன் டாலர் வசூலித்த ... வனிதா டுவிட்டரை விட்டு வெளியேற நயன்தாரா தான் காரணமா? வனிதா டுவிட்டரை விட்டு வெளியேற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

யார்மனிதன் - Toronto,கனடா
22 ஜூலை, 2020 - 21:13 Report Abuse
யார்மனிதன் ஏன் ஐயா எத செய்தாலும் 5 வருஷம் லேட்டாவே செய்ரீங்க
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
22 ஜூலை, 2020 - 18:04 Report Abuse
Mirthika Sathiamoorthi இழிவு படுத்த வேண்டிய நிர்பந்தம் இப்போ ஏன்? கடவுள் என்பது சிறு சிறு நம்பிக்கையின் மிகப்பெரிய நம்பிக்கை வேறுமாதிரி சொல்லணும்ன்னா சிறு சிறு மூட நம்பிக்கையின் மிகப்பெரிய மூட நம்பிக்கை..எப்படிவேனும்னாலும் எடுத்துக்கோங்க..இந்த நம்பிக்கை வாழ்க்கையின் கஷ்டங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையை கொடுக்கிறதென்று வைத்துக்கொள்வோம்..அதில் என்ன தவறு இருக்கமுடியும்...ஒரு சமயம் தனியே இடுகாட்டை கடந்துசெல்லவேண்டிய சூழல் எனக்கு வந்தது...ஒரு 10 நிமிட நடை...வேகமாக நடந்தால் 5 அல்லது 6 நிமிடத்தில் கடந்து பிரதான சாலைக்கு வந்துவிடலாம்...இடுகாட்டை பார்க்கும் பொழுது ஒரு சிலிர்ப்பு வரும்...எனக்கும் வந்தது..அதை கடக்கும் வரை நான் உரக்க சொன்னது கந்தசஷ்டி கவசம்...இது நம்பிக்கையா மூட நம்பிக்கையா என்பது கேள்வி அல்ல..எனது பயத்தை போக்கியதா என்பதே கேள்வி..இதெல்லாம் பொய் என மூளை சொன்னாலும் மனதின் வலிமையை கூடவுதவியதா என்பதே உண்மை..இதில் ஏன் அறிவியல் பொய் உண்மையென விளக்கம்? ...இடுகாடு எனும் பொழுது இன்னொன்றும் யாபகம் வருகிறது..அதை கடக்கும் தாய் தன கை குழந்தையை முந்தானையால் மூடிக்கொள்வதை நான் பலமுறை கவனிதுள்ளேன்...இது மூட நம்பிக்கையா தாயின் பாசமா? இங்கே நாம் அவளிடம் அறிவியல் பேசமுடியுமா? இல்லை அவள் பாசத்தை ரசிக்க தோன்றுமா? வாழ்க்கையின் எதார்த்த நிகழ்வுகளை யாரையும் துன்புறுத்தாத சாதாரண ஒன்றை அறிவியல் பேசி சிக்கலாகா மாற்ற வேண்டுமா? { இது மதவாதிகளுக்கும் பொருந்தும் அடுத்தவரின் ஆலயங்கள் இடிக்க படும்போது அவர்களின் நம்பிக்கை புண்படாது? இந்துக்கள் புண்பட்டனர் நமக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்த தக்காளிசட்டினி } தாய் சொல்லித்தான் தகப்பனின் பெயர் தெரியும்ன்னு சொல்லுவாங்க...தாயிடம் சென்று அதை நிரூபிக்க சொல்வதில் அறிவியல் பேசுவதை விட அவளை நம்புவதில் என்ன சிக்கல்? அதுமாதிரிதான் மத நம்பிக்கையும் கழுதையோ பேயோ பிசாசோ எதையோ கும்பிட்டு போறாங்க அதை கொண்டு சமூகத்தை பால் படுத்தாதவரை..சமூகத்தை சீர்திருத்த நினைப்பவர்கள் பக்குவமாக கையாளாமல் முள் மீது விழுந்த துணியை இழுத்ததால் வந்த வினை...தெய்வ நிந்தனை வேண்டாமே அது எந்த மத தெய்வமாக இருந்தால் என்ன..அவர்களை உண்மையென நம்பி வணங்கும் பல அப்பாவி மனிதர்களின் மனவேதனையை தூண்டியா நம்மை நாம் நிரூபிக்க வேண்டும்? இதுதான் சூப்பர்ஸ்டார் சொல்லவிரும்புவது...எம்மதமும் சம்மதம்..கந்தனுக்கு ஆரோகிரா...
Rate this:
Jeya - London,யுனைடெட் கிங்டம்
22 ஜூலை, 2020 - 17:10 Report Abuse
Jeya நண்பரே - இந்து மதம் மட்டும் இல்லை, எல்லா மதங்களிலும் ஜாதிய கட்டமைப்பு உள்ளது. நன்றாக சிந்தித்து பார்த்தால் - எல்லா மதங்களிலும் எல்லாமே ஏற்பிற்குரிய விஷயங்கள் இல்லை. எல்லா மதங்களும் தவறை திருத்தி கொள்ள வேண்டும். தவறை திருத்திக்கொள்ளாத போது அதை எதிர்ப்பது உகந்தது. இந்து மதம் என்பது 1900 ம் வருடங்களில் வைக்கப்பட்ட பெயர். அதற்கு முன்பு பல மாறுதல்களை சந்தித்து உள்ளது. பல வழிபாடு முறைகளை உள்ளடக்கியது இன்றைய மதம். இந்த இணைப்பு கடந்த 3000 ஆண்டுகளாக நடந்தது. இன்றைய அரசியல் காரணங்களுக்காக இதை அறிய மதம் என்றும் திராவிட மதம் என்றும் பிரிக்க முயற்சி நடக்கிறது.
Rate this:
Param -  ( Posted via: Dinamalar Android App )
22 ஜூலை, 2020 - 15:28 Report Abuse
Param Come outside and speak
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
22 ஜூலை, 2020 - 18:51Report Abuse
RaajaRaja Cholanஐய்யோயோ வேண்டாம், நீங்க எவ்வளவு பெரிய ஆளு உங்க முன்னாடி அவரு ஜுஜுபி...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
22 ஜூலை, 2020 - 20:16Report Abuse
Mirthika Sathiamoorthiin the covid period u ask him to come out? what a genius?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in