சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
ரஜினிகாந்த் பரபரவென இயங்கி கொண்டிருந்த காலத்தில் அவர் போன்ற சாயலை கொண்ட நளினிகாந்த் வந்தார். கமல் பிசியாக இருந்தபோது அவர் சாயலில் மோகன் வந்தார். இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஆர்.ராதா, என்.கிருஷ்ணன் மாதிரியானவர்களின் இடங்களை யாராலும் நிரப்ப முடியாது. அந்த வரிசையில் வருகிறவர் டி.எஸ்.பாலையா.
தில்லானா மோகனாம்பாள், காதலிக்க நேரமில்லை. பாக பிரிவினை, மதுரை வீரன், திருவிளையாடல் மாதிரி படங்களில் ஹீரோக்களை விட பாலையாதான் அதிகம் பேசப்பட்டார்.
மனோபாலா இப்போது காமெடி நடிகர். அவர் இயக்குனராக இருந்தபோது காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்ய விரும்பினார். காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ், பாலையாக நடித்த காட்சிகள் காலத்தால் அழிக்க முடியாத காமெடி பொக்கிஷங்கள். அதுவும் குறிப்பாக நாகேஷ் ஒரு திகில் கதையை பாலையாவிடம் சொல்வதும் அதற்கு அவர் கொடுக்கும் ரீயாக்ஷனும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிக்கலாம்.
காதலிக்க நேரமில்லை ரீமேக் உரிமத்தை வாங்கிய மனோபாலா அதனை இயக்கிய ஸ்ரீதரிடம் சொல்லி ஆசிவாங்கி வரலாம் என்று சென்றார். யார் யார் கேரக்டரில் யார் யார் நடிக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு மனோபாலா அன்றைக்கு முடிவு செய்திருந்த நடிகர்களை சொன்னார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ஸ்ரீதர் பாலையாக கேரக்டரில் யார் நடிக்கிறார் என்ற கேட்டார். அதற்கு மனேபாலா அவர் கேரக்டருக்குதான் ஆள் கிடைக்கவில்லை என்றார். நீ எங்க தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். அவருக்கு மாற்றான நடிகர் உலகத்திலேயே கிடையாது. போயி வேற வேலை இருந்தா பாரு என்று கூறிவிட்டார் ஸ்ரீதர். மனோபாலாவும் அந்த திட்டத்தை கைவிட்டார்.