ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் |
இன்று இயக்குனர் ஸ்ரீதரின் 87வது பிறந்த நாள். ஜூலை, 22, 1933 செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் கிராமத்தில், விவசாய குடும்பத்தில், 1933 ஜூலை, 22ம் தேதி பிறந்தவர், ஸ்ரீதர். கடந்த, 1954ல், ரத்த பாசம் என்ற படத்தின் மூலம், வசனகர்த்தாவாக, திரையுலகில் நுழைந்தார். வசன கர்த்தாவாக, டைரக்டராக, தயாரிப்பாளராக, நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். 1959ல், கல்யாணபரிசு படத்தின் மூலம், இயக்குனராக அறிமுகமானார். காதலிக்க நேரமில்லை, தேன்நிலவு, இளமை ஊஞ்சலாடுகிறது உட்பட, 70 படங்கள் இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக யூத்தான காதல் படங்களை இயக்கியவர். அதோடு வசனங்களில் இயல்பான வார்த்தைகளை முதன் முதலாக பயன்படுத்தியவர். ஒன்றிரண்டு படங்களை தவிர அவர் இயக்கிய அத்தனை படங்களும் மகத்தான வெற்றி பெற்றவை.
இயக்குனர் ஸ்ரீதரிடம் இருந்த மற்றுமொரு சிறப்பு அவர் கேரக்டர் தேர்வில் திறமையானவர். தன்னுடைய கதையை எழுதும்போதே அந்த கதையில் வரும் கேரக்டர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கச்சிதமாக முடிவு செய்திருப்பார். அதற்கேற்ற நடிகர்கள் கிடைக்காவிட்டால் அந்த படத்தை எடுக்க மாட்டார். கேரக்டர்கள் தேர்விலேயே தனது படத்தின் வெற்றியை தீர்மானித்து விடுவார்.
அதற்கு ஒரு உதாரணம் இது. காதலிக்க நேரமில்லை படத்தின் கதையை, அது படமாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டார். அதில் ஹீரோவாக துறுதுறுப்பான, ரொம்ப யூத்தான, கொஞ்சம் ஸ்டைலான நடிகர் கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் என 40 வயதை கடந்தவர்கள் தான் அப்போது முன்னணியில் இருந்தார்கள். அதனால் ஒரு புதிய இளைஞனை அறிமுகப்படுத்தலாம் என்று தேடினார். கிட்டத்தட்ட 100 இளைஞர்களுக்கு மேல் பார்த்தும் அவருக்கு திருப்தி இல்லை.
இந்த நேரத்தில் ஸ்ரீதரின் நண்பர் ஒருவனர் "இந்த பையனை பாருங்கள் " என்று அழைத்து வந்தவர் தான் ரவிச்சந்திரன். "இந்த பையன் மலேசியா. இங்கு டாக்டருக்கு படிக்க வந்திருக்கிறான். அவனுக்கு நடிக்கிற ஆசையெல்லாம் இல்லை. ஆனா நீங்க தேடுற ஆள் மாதிரி இருக்கான்னு கூட்டி வந்திருக்கேன்" என்றார்.
ரவிச்சந்தரன் வசதியான வீட்டு பையன், மேற்கத்திய நாகரீகத்தில் வளர்ந்தவர். அவர் ஸ்ரீதரை பார்த்த உடனேயே "ஹாய் ஸ்ரீதர், ஐ ஏம் ரவிச்ந்திரன்" என்று கை கொடுத்தார். ஸ்ரீதரை பார்த்தாலே அப்போது நடிகர், நடிகைகள் எழுந்து நின்று ஒரு அடி தள்ளி நிற்பார்கள். அவரிடம் ஜாலியாக கைகொடுத்தோடு அல்லாமல் ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவர் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து விட்டு ஸ்ரீதரிடம் பாக்கெட்டை நீட்டினார்.
இந்த காட்சியை கண்ட அனைவரும் அதிர்ந்து விட்டனர். ஆனால் ஸ்ரீதர் அழைத்து வந்த நண்பரை கூப்பிட்டு "இவன்தான் என் படத்தின் ஹீரோ. ஷுட்டிங்கிற்கு ரெடியாக சொல்லுங்க" என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாராம். அவர் எதிர்பார்த் தெனாவெட்டு, ஸ்டைல், அழகு அத்தனையும் ரவிச்சந்திரனிடம் இருந்ததே இதற்கு காரணம்.