Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பவர் ஸ்டார்' டிரைலரை இலவசமாக வெளியிட்ட ராம்கோபால் வர்மா

22 ஜூலை, 2020 - 10:48 IST
எழுத்தின் அளவு:
RGV-released-powerstar-trailer-as-free

சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா, தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான பவன் கல்யாணைக் கிண்டலடிக்கும் விதத்தில் எடுத்துள்ள படம் 'பவர் ஸ்டார்'. இப்படத்தின் டிரைலரை இன்று(ஜூலை 22) அவருடைய சொந்த இணையதளத்தில் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார். அந்த டிரைலரைப் பார்க்க 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.

ஆனால், டிரைலர் இணையதளங்களில் லீக் ஆனதால், சற்று முன் டிரைலரை யு-டியுபில் இலவசமாகவே வெளியிட்டுவிட்டார். “பவர்ஸ்டார்' டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாக வேண்டியது. ஆனால், லீக் ஆகிவிட்டது. எங்களது அலுவலகத்தில் இருக்கும் ஒருவர்தான் அதற்குக் காரணம் என நினைக்கிறேன். அதற்கான பொறுப்பை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். டிரைலரைப் பார்க்க பணம் செலுத்திய அனைவருக்கும் அப்பணம் உடனடியாக திருப்பித் தரப்படும்,” என்றும் கூறியுள்ளார்.

ஜுலை 25ம் தேதி இப்படத்தை அவருடைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப் போகிறாராம். அதற்கு முன்னதாக முன்பதிவு செய்தால் படத்தைப் பார்க்க 150 ரூபாய் கட்டணமாம். ஜுலை 25ம் தேதி காலை 11 மணிக்குப் பிறகு முன்பதிவு செய்தால் 250 ரூபாய் கட்டணமாம்.

'பவர் ஸ்டார்' டிரைலரைப் பார்க்க யாரும் எதிர்பார்த்த அளவில் 25 ரூபாய் பணம் கட்டி முன்பதிவு செய்யத் தயாராக இல்லை. எனவே, ராம்கோபால் வர்மாவே டிரைலரை யு டியுபில் லீக் செய்துவிட்டு, இப்படி நாடகமாடுகிறார் என்றும் டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

இன்று வெளியாகி உள்ள டிரைலர் 4 நிமிடங்கள் உள்ளது. பவன்கல்யாணின் அரசியல் வாழ்க்கை, அதன் தோல்வி ஆகியவைதான் படத்தில் முக்கியமாக இடம் பெறும் எனத் தெரிகிறது. டிரைலரில் அப்படியான காட்சிகள்தான் அதிகம் உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடக்கம் போய் கவர்ச்சி!அடக்கம் போய் கவர்ச்சி! 87வது பிறந்தாள்: கேரக்டர் தேர்விலேயே வெற்றியை நிர்ணயிப்பவர் ஸ்ரீதர் 87வது பிறந்தாள்: கேரக்டர் தேர்விலேயே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in