‛வாரியர்' விழாவில் கலந்து கொள்ளும் 28 பிரபலங்கள் | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! |
எந்த சேனலில், எந்த நிகழ்ச்சியை அதிகம் பேர் பார்க்கின்றனர் என்பதை, இந்திய ஒளிபரப்பு பார்வையாளர்கள் கவுன்சில் எனப்படும், 'பார்க்' நிறுவனம் அவ்வப்போது பட்டியிலிட்டு வெளியிடும்.
இந்த கொரோனா காலத்தில் வெளியான பட்டியலில், 110 கோடி பேர் பார்த்தது, விஜய் நடித்த படம் என கூறப்பட்டது. இதில், இரண்டாவது இடத்தில் ராகவா லாரன்சும், மூன்றாவதாக ரஜினியும் இடம் பெற்றிருந்தனர். இதை, விஜய் ரசிகர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் லோகோவுடன், 'டுவிட்டரில்' டிரெண்டிங்காக்கி இருந்தனர். ஆனால், இது போலி என, தெரியவந்துள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள, 'பார்க்' நிறுவனம், 'எங்கள் நிறுவன லோகோவை தவறாக பயன்படுத்தியுள்ளனர்' என, கூறியுள்ளது. வீண் ஜம்பத்தால் உணர்ச்சிவசப்பட்ட விஜய் ரசிகர்கள், தற்போது ஏமாற்றமடைந்து நிற்கின்றனர்.