'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' | கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி |
அஜித் பட அப்டேட்கள் என்றாலே ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி தீர்த்து விடுவார்கள். வலிமை படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, ரசிகர் ஒருவர் உருவாக்கிய போஸ்டர் செம வைரலாகி இருக்கிறது.
அதில், வினோத் இயக்கத்தில் விருமாண்டி படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித் நடிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் போனிகபூரே தயாரிக்க இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. விஸ்வாசம் பட கெட்டப்பை வைத்து இந்த போஸ்டரை உருவாக்கியுள்ளனர்.
இது உருவாக வாய்ப்பில்லை என்றாலும் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டராக இருந்தாலும் செம மாஸாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
கமல் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்த படம் விருமாண்டி. 2004ம் ஆண்டு வெளியான இப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், வித்தியாசமான கதைக்களத்தால் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.