தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் | ஷாருக்கானுடன் நடிப்பதற்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் கேட்ட பாகிஸ்தான் நடிகர் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் இந்தக் கால இயக்குனர்களில் தமிழ் இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முன்னே சென்றவர் ராஜமவுலி. அவரது 'பாகுபலி 1, 2' படங்கள் வசூலில் புதிய வரலாற்று சாதனை படைத்தன.
தெலுங்குத் திரையுலகத்தில் ராஜமவுலிக்கு முன்னதாக 25 வருடங்களுக்கு முன்பே தனி முத்திரையை பதித்தவர் ராம்கோபால் வர்மா. இந்த கொரானோ ஊரடங்கில் ஏற்கெனவே இணையதளத்தில் நேரடியாக 'கிளைமாக்ஸ், நேக்டு நங்கா நக்னம்' ஆகிய படங்களை வெளியிட்டு வசூலைப் பார்த்துவிட்டார்.
அடுத்து தெலுங்குத் திரையுலகின் முன்னணி ஹீரோவான பவன் கல்யாணைக் கிண்டலடிக்கும் வகையில் 'பவர் ஸ்டார்' என்ற படத்தை இணையதளத்தில் நேரடியாக வெளியிட உள்ளார். இப்படத்தின் டிரைலர் ஜுலை 22ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், டிரைலரை 25 ரூபாய் கட்டணம் செலுத்திதான் பார்க்க முடியும் என்ற புதிய முறையை ஆரம்பிக்கிறார் வர்மா.
“ஹே ராஜமவுலி, இப்போதைய நிலையில் மொத்த உலகமும் ஆன்லைனுக்கு மாறிவிட்டது. இந்த புதிய காலத்தில், புதிய யோசனைகளுடன் அவைதான் உண்மையான மார்க்கெட். 'ஆர்ஆர்ஆர்' டிரைலரை பணம் கொடுத்து பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம்,” என ராஜமவுலிக்கும் டிரைலரைப் பார்க்க கட்டணம் வசூலியுங்கள் என யோசனை சொல்கிறார்.