பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் இடம்பெற்ற "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்...". என்ற பாடலுக்கு ஆடி, அந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தவர் அனு அகர்வால். ஆஷிகி என்ற இந்திப் படத்தில் அறிமுகமானார், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கசாப் தமாசா, கிங் அங்கிள், ராம் சாஸ்த்ரா உள்பட பல படங்களில் நடித்தார்.
1999ம் ஆண்டு நடந்த ஒரு சாலை விபத்தில் படுகாயம் அடைந்த அனு அகர்வால், கோமா நிலையை அடைந்தார். 29 நாட்கள் கோமாவில் இருந்து அவர் மீண்டாலும் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டனார். ஆனால் மன உறுதியுடன் போராடி மீண்டார். இயற்கை வைத்தியம், யோகா ஆகியவற்றால் அவர் மீண்டார்.
அவரின் இந்த 20 வருட உயிர் போராட்டத்தை மையமாக வைத்து இந்தியில் வெப் தொடர் தயாராகிறது. இதனை முன்னணி நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது. இதில் அவரது கேரக்டரில் அவரையே நடிக்க கேட்டுள்ளது. விரைவில் நடிக்க இருக்கிறார். இதனை அனு அகர்வால் தெரிவித்திருக்கிறார். அனு அகர்வால் தனது வாழ்க்கை போராட்டத்தை புத்தகமாகவும் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.