என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
உலகத்தில் தற்போது மிகவும் மலிவாகக் கிடைப்பது ஒன்றே ஒன்று தான். அது யு-டியுப் சேனல். ஒரு நல்ல ஆன்ட்ராய்டு போன் இருந்தாலே போதும், ஒருவர் யு-டியுப் சேனல் ஆரம்பித்துவிடலாம் என்ற நிலைமை வந்துவிட்டது. எதையாவது சர்ச்சையாகவோ, காரசாரமாகவே பேசிவிட்டால் சீக்கிரமே பிரபலமாகிவிடலாம்.
ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் தனது சர்ச்சை மிகுந்த கருத்துக்களால் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை கஸ்தூரி. பல டிவி விவாதங்களிலும், பல இணையதள வீடியோ நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தன் கருத்துக்களைப் பதிவிடுவார். கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இந்தக் காலத்து ரசிகர்களுக்கும் பரிச்சயமானார்.
இதனிடையே, புதிதாக ஒரு யு-டியுப் சேனலை ஆரம்பிக்க உள்ளதாக கஸ்தூரி தெரிவித்துள்ளார். அதற்காக மூன்று பெயர்களைக் கொடுத்து அதில் ஒன்றைத் தேர்வு செய்து தருமாறு ரசிகர்களிடம் கேட்டுள்ளார். இனி, கஸ்தூரியையும் ஒரு தொகுப்பாளராக, பேட்டியாளராக, அரசியல் விமர்சகராகப் பார்க்கலாம்.