பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
விஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே அவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் தாய்மார்களின் ஆதரவையும் பெற்றுத்தந்த படம் பிச்சைக்காரன். இந்தப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிச்சகாடு என்கிற பெயரில் வெளியாகி அங்கேயும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. ஆனால் அதை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த படங்கள் எதுவுமே சுமாரான வெற்றியை கூட பெறவில்லை..
தற்போதும் சில படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வந்தாலும் தனது சரிந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்த வேண்டும் என்றால் அது பிச்சைக்காரன் படத்தால் முடியும் என அந்தப்படத்தின் பார்ட்- 2வை எடுப்பதற்காக வேலைகளில் இறங்கினார்... பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி வேறு படங்களில் பிசியாக இருப்பதால் இந்த இரண்டாம் பாகத்திற்கு தானே கதை எழுதியுள்ளாராம் விஜய் ஆண்டனி.
இந்த இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் ஜூலை-24ஆம் தேதி பர்ஸ்ட் லுக்குடன் வெளியிட போவதாக விஜய் ஆண்டனியே அறிவித்துள்ளார். ஆனால் எங்கேயும் அவர் பிச்சைக்காரன் என பெயரை குறிப்பிடவில்லை. ஒருவேளை விஜய் ஆண்டனியே இந்தப்படத்தை இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.