Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குற்றப்பரம்பரை பஞ்சாயத்து தீர்ந்தது: பாரதிராஜாவும், பாலாவும் சமரசம்?

19 ஜூலை, 2020 - 18:38 IST
எழுத்தின் அளவு:
kutra-parambarai-problem-solved

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குற்றப்பரம்பரை பற்றிய கதைக்களத்தில் படம் பண்ணுவது தொடர்பாக பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது ஊரறிந்த கதை தான். பேட்டிகள், செய்தியாளர் சந்திப்பு என இருவருமே ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டினர். இருவருமே அப்படத்தை தனித்தனியே பண்ணுவதில் தீவிரம் காட்டினர். ஆனால் இருவரது ஆசையுமே நிறைவேறவில்லை.

இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என தமிழ்த் திரையுலகினர் ஒன்று சேர்ந்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினர். கையெழுத்திட்டவர்கள் பட்டியலில் பாலாவின் பெயரும் இருந்தது. இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

சில மாதங்களுக்கு முன்பே இருவரும் நேரில் பேசி சமரசமாகி விட்டார்களாம். இப்போது அவர்கள் இருவருக்குள்ளும் எந்தப் பிரச்சினையும் இல்லையாம். அதனால் தான் பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என பாலாவும் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
900 மில்லியனைக் கடந்த 'ரவுடி பேபி'900 மில்லியனைக் கடந்த 'ரவுடி பேபி' ஸ்ரீலங்காவில் மீண்டும் வெளியானது பிகில் ஸ்ரீலங்காவில் மீண்டும் வெளியானது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
22 ஜூலை, 2020 - 07:32 Report Abuse
Parthasarathy Badrinarayanan பாரதிராஜாவுக்கு விருது கொடுத்து தாதாசாகேப் அவர்களைக் கேவலப்படுத்தாதீர்கள்
Rate this:
19 ஜூலை, 2020 - 20:42 Report Abuse
ilaiyaraja muthu நாங்க ரொம்ப பாவம் யா.... ஏற்கனவே கொரோனா வேற..... இவங்க ரெண்டு பேரும் படமே எடுக்க வேண்டாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in