பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
நடிகையும், கர்நாடக மாநிலம் மாண்டிய தொகுதி எம்.பி.யுமான சுமலதாவுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது:
ஜூலை 4ந் தேதி மண்டியா தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினேன். பின்னர், வீட்டுக்கு வந்தபோது எனக்கு லேசான தலைவலி, தொண்டை வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.
கொரோனா நோயாளிகளை சிலர் குற்றவாளிகள் போல் பார்ப்பதும், நடத்துவதும், அவர்களை சமூகத்தில் இருந்து தள்ளிவைப்பது சரியில்லை. கொரோனா நோய் என்பது ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான யுத்தம். அதை எதிர்த்து நாம் அனைவரும் ஒற்றுமையாக போராட்டம் நடத்த வேண்டும். கொரோனா நோயாளிகள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இது நம்முடைய பொறுப்பும் கூட. இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.