நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
கேரளாவில் நடந்து வந்துள்ள தங்க கடத்தல் சம்பவம் அந்த மாநில அரசையே ஆட்டம் காண வைத்துள்ளது. சொப்னா என்ற பெண்ணை மையமாக வைத்து செயல்பட்டு வந்த கடத்தல் கும்பலுடன் கேரள மாநில அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளும் ஈடுபட்டு வந்திருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 200 கிலோ தங்கத்தை இந்த கும்பல் கடத்தி உள்ளது.
கடத்தல் கும்பலின் பெரிய யுக்தி என்பது வெளிநாட்டு நட்சத்திர கலைவிழாவுக்கு செல்லும் சினிமா நட்சத்திரங்களை பயன்படுத்தி அவர்கள் வழியாக தங்க கடத்தலை நடத்துவது தான். இது பலமுறை நடந்துள்ளது. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை பூர்ணாவை ஒரு கடத்தல் கும்பல் மிரட்டிய சம்பவம் வெளிவந்தது. பூர்ணா போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து இது நடந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலுக்கும், சொப்னா கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. சொப்னா கும்பலின் ஒரு யூனிட் தான் பூர்ணாவிடம் பேரம் பேசி உள்ளது. அவர் படியாததால் மிரட்டல் விடுத்தது.
இது தொடர்பாக பூர்ணாவிடம் விரைவில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்றும், இந்த வழக்கில் அவர் ஒரு சாட்சியாக சேர்க்கப்படலாம் என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.