Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்து விட்டேன்!

17 ஜூலை, 2020 - 17:55 IST
எழுத்தின் அளவு:
I-watched-Master-movie-more-than-10-times-says-Lokesh

மாநகரம், கைதி என தனது முதல் இரண்டு படங்களையும் வித்தியாசமான கதைக்களத்தால் மாபெரும் வெற்றிப் படங்களாக்கியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு இன்னமும் எகிறிக் கிடக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டிய இப்படம் கொரோனா பிரச்சினையால் தள்ளிப் போயுள்ளது. அப்போது ரிலீசுக்கு தயாராக இருந்த பல படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில், மீண்டும் திரையரங்குகள் திறந்தபின் அதில் தான் வெளியிடுவோம் என மாஸ்டர் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். இதனால் அப்படம் பற்றிய ஒவ்வொரு அப்டேட்டையுமே விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விரைவில் இப்பட டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனது படம் பற்றிய முதல் விமர்சனத்தைத் தானே கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். 'மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷனின் போது சுமார் பத்து முறை மாஸ்டர் படத்தைப் பார்த்ததாகவும், ஒவ்வொரு முறையும் முதல் முறை பார்த்தது போன்ற உணர்வையே படம் கொடுத்ததாகவும் ' அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் படம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்துதரப்பு சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
'ரோபோ' சாதனையை முறியடிக்க முடியாத 'கேஜிஎப்''ரோபோ' சாதனையை முறியடிக்க முடியாத ... திமுகவில் சேருகிறாரா மீரா மிதுன்? திமுகவில் சேருகிறாரா மீரா மிதுன்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

LAX - Trichy,இந்தியா
23 ஜூலை, 2020 - 14:05 Report Abuse
LAX இப்புடியே தான் ரசிகர்கள் ன்ற பேர்ல சில கோமாளிகள் தான் விரும்பும் சினிமாக்காரனுக்கு புகழ் சேர்க்க விரும்பி, அவங்களே பல தடவை டீசர், டோசர் னு எதயாவது பாத்துட்டு, இத்தன லட்சம் பேர் பாத்தாங்க.. அத்தன கோடி வசூல் னு பீத்திக்க வேண்டியது.. என்ன கொடும சாமீ..
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
19 ஜூலை, 2020 - 09:56 Report Abuse
பெரிய ராசு உன்படத்த நீயே ஆயிரம் தடவை பார்த்துக்கிட்டு ஒரு கோடி பெரு பார்த்தனுனு பேட்டி கொடு சோசப்பு
Rate this:
19 ஜூலை, 2020 - 07:48 Report Abuse
Murphys Law It dsnt matter how many time you watch a movie. Crape will be always crape
Rate this:
K.ANBARASAN - muscat,ஓமன்
18 ஜூலை, 2020 - 11:43 Report Abuse
K.ANBARASAN எழுநூறு எம்பீ போதும் டவுன்லோட் செய்ய. மனசை கல்லாக்கி கொண்டு ஒரே ஒரு தடவை பார்த்து விடலாம் என்று நினைக்கிறேன்.
Rate this:
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
18 ஜூலை, 2020 - 11:39 Report Abuse
சொல்லின் செல்வன் இப்படித்தான் சுறா இயக்குனரும் சொன்னார். படம் விஜய் ரசிகர்கள் மட்டும் கொண்டாட மாட்டார்கள். பொது ஜனங்களும் கொண்டாடுவார்கள் என்று. ஆனால் விஜய் ரசிகர்களே படத்தை கழுவி ஊத்தினார்கள்
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in