பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
யு-டியூப் வீடியோ இணையதளம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்த பிறகு சினிமா பாடல்களுடன், தனிப் பாடல்களுக்கும், பக்திப் பாடல்களுக்கும் தனி வரவேற்பு கிடைத்துள்ளது.
'விஸ்வரூபம், கடாரம் கொண்டான், சாஹோ' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிப்ரான், சில இந்து மத பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இப்பாடல்களுக்கு யு-டியூபில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஜிப்ரான், இந்துமத பக்திப் பாடல்களை தனி கவனத்துடன் கொடுத்துள்ளது தான் அந்த வரவேற்புக்குக் காரணம்.
இன்று காலபைரவர் பற்றி பாடியுள்ள 'காலபைரவாஷ்டகம்' பாடலை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு முன்பு, கடந்த சில வாரங்களில் வெங்கடேசப்பெருமாள், சிவன், ஐயப்பன், முருகன், வினாயகர் ஆகிய கடவுளர்களின் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார் ஜிப்ரான்.