Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரித்விராஜ் - சுரேஷ்கோபி படங்களுக்கு ஒரே நபரால் வந்த புதிய சிக்கல்

16 ஜூலை, 2020 - 16:10 IST
எழுத்தின் அளவு:
Still-prithviraj---Suresh-gopi-movie-in-issue

மலையாளத்தின் கமர்ஷியல் இயக்குனரான ஷாஜி கைலாஷ் டைரக்சனில் முதன்முறையாக கடுவா என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் பிரித்விராஜ். இதற்கான அறிவிப்பும் கடந்த வருடமே வெளியானது. இந்த படத்தின் கதையை ஜினு ஆபிரகாம் என்பவர் எழுதியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ்கோபி நடிக்கவுள்ள 250 வது படத்தின் போஸ்டர் வெளியானது.. இதைப்பார்த்துவிட்டு கடுவா படத்தின் கதாசிரியரான ஜினு ஆபிரகாம், தான் கதை எழுதியுள்ள கடுவா படத்தின் சாயல் சுரேஷ்கோபியின் படத்தில் தெரிவதாகவும் தன்னுடைய படத்தின் நாயகன் கதாபாத்திரமான கடுவா என்கிற பெயர் போலவே சுரேஷ் கோபியின் கதாபாத்திரமான கடுவாகுன்னல் குருவச்சன் என்கிற பெயரும் இருப்பதையும் சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றமும் சுரேஷ்கோபி படத்தின் படப்பிடிப்பை நடத்த தடை விதித்தது.

ஆனால் இந்த கடுவா என்கிற கதாபாத்திரத்தை தனது படத்திற்காக முதன்முதலாக உருவாக்கியவர் மலையாளத்தில் பிரபல கதாசிரியராக இருக்கும் ரெஞ்சி பணிக்கர் தான்.. இப்போதும் கேரளாவில் உயிருடன் இருக்கிறார் இந்த குருவச்சன். இவருக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் அந்த காலகட்டத்தில் நடந்த மோதல் ரொம்பவே பிரபலம். அதனால் இந்த குருவச்சன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து 20 வருடங்களுக்கு முன் மோகன்லாலை வைத்து ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஒரு படத்தை எடுப்பதற்காகத்தான் இந்த கதையை உருவாக்கினார் ரெஞ்சி பணிக்கர்.. ஆனால் அந்த படம் அப்போது கைவிடப்பட்டது. ரெஞ்சி பணிக்கரை பொறுத்தவரை சுரேஷ்கோபி, ஷாஜி கைலாஷ் இருவருமே தனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் என்பதால், இருதரப்பினருமே அந்த பெயரை பயன்படுத்தி கொள்ளலாம் என சமரசம் செய்து வைத்தார். .

இப்போது எதிர்பாராத விதமாக சம்பந்தப்பட்ட அந்த குருவச்சன் என்பவரே தனது கதையையும் தனது பெயரையும் பயன்படுத்தி படம் எடுக்க கூடாது என இந்த இரண்டு படங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். ரெஞ்சி பணிக்கர் சொன்னபடி எனது கதையில் மோகன்லால் அல்லது சுரேஷ்கோபி இருவரில் ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும்.. ரெஞ்சி பணிக்கர் பங்களிப்பு இல்லாமல் வேறு யாராவது என்னுடைய கதையை படமாக்க முயற்சித்தால் சட்டப்படி வழக்கு தொடர்வேன் என்றும் கூறியுள்ளாராம். ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொன்று தலை தூக்குகிறதே என டென்சனில் இருக்கிறார்களாம் இரண்டு படக்குழுவினரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சம்பள விவாகரத்தில் தலையிட மாட்டோம் : மலையாள நடிகர் சங்கம் அறிவிப்புசம்பள விவாகரத்தில் தலையிட மாட்டோம் : ... 10 வருடங்களை வெற்றிகரமாக கடந்த நிவின் பாலியின் மூவர் அணி 10 வருடங்களை வெற்றிகரமாக கடந்த நிவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in