பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப். தமிழில் நான் ஈ, புலி, படங்களில் நடித்தார். இவர் நடித்த பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. ஏற்கெனவே நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமப்புற ஏழை பள்ளி மாணவர்களுக்கு மரத்தடி வகுப்புகளை நடத்தி வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது கிச்சா சுதீப்பும் இணைந்திருக்கிறார். கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகளை அவர் தத்தெடுத்து, உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் ஆசிரியர்களின் சம்பளத்தையும், பள்ளியை டிஜிட்டல் மயமாக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. சத்தமின்றி அவர் செய்து வந்த இந்த பணி தற்போது தான் வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது.