Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழர்கள் ஓட்டு வேணும், தமிழ் கடவுள் வேண்டாமா...! - கருப்பர் கூட்டத்தை விளாசிய மாளவிகா

16 ஜூலை, 2020 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Kandhasasti-kavasam-issue-:-Malavika-slams-Karuppar-Kootam

முருகப் பெருமானை வழிபடும் வகையில் பாடப்படும் கந்தர் சஷ்டி கவசம் மிகவும் புனிதமாக கருத்தப்படுகிறது. கருப்பர் கூட்டம் என்ற யு-டியூப் சேனலில் இதை மிகவும் ஆபாசமாக விமர்சித்து ஒருவர் பதிவிட்டார். இது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மத தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜே.ஜே., ஆறு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்த மாளவிகா அவினாஷ் வெளியிட்ட வீடியோ பதிவில் கருப்பர் கூட்டத்திற்கு அதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகளையும் விளாசி தள்ளியுள்ளார். அவர் பேசியதாவது...

அனைவருக்கும் வணக்கம். கந்த சஷ்டி கவசம் பற்றி தான் நான் பேசப்போகிறேன். அது என்னமோ கருப்பர் கூட்டமாமே... இவர்கள் கருப்பர்கள், அப்போ நாங்கள் யாரு... கருப்பர் கூட்டம் என்ன செய்கிறது, இந்து கடவுள்களை எல்லாம் திட்டுகிறது. நாங்கள் கருப்பசாமி என்ற கடவுளை வணங்குகிறோம். அது உங்களுக்கு தெரியுமா.. சிவனின் அவதாரமாக நாங்கள் அவரை பார்க்கிறோம். சிவனும் கருப்பு தான், அவர் பையன் என்ன வெள்ளக்காரனா. ராமர், கிருஷ்ணர், மீனாட்சி எல்லாருமே கருப்பர்கள் தான். ஆனால் அவர்களை பிடிக்காது. இந்துக்கடவுள்கள் எல்லாமே கருப்பு தான்.



ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் ஒரு கும்பல் வந்தது. கழுத்தில் கத்தி வைத்தது. இருக்கின்ற கோவில்களை எல்லாம் உடைத்து போட்டார்கள், மதம் மாறுகிறாயா கொலை செய்யட்டுமா என்று கேட்டார்கள். இருக்கிற சொத்துக்களை எல்லாம் கொள்ளை அடித்து சென்றார்கள். அவர்கள் மீது உங்களுக்கு எந்த கோபமும் இல்லை. 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பல் வந்தது, அவர்கள் நயமாக பேசியே மதம் மாற்றம் செய்தார்கள். உண்மையில் அவர்கள் தான் வெள்ளைக்காரர்கள். அவர்களை நீங்கள் திட்ட மாட்டீர்கள். ஆனால் உங்கள் உடன் 10 ஆயிரம் ஆண்டுகளாக உள்ளோம், இந்துக்களாகிய எங்களை திட்டுவீர்கள்.

உங்களின் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனை, நாத்தீகம் இவை எல்லாம் இந்துக்கடவுள்களுக்கு மட்டும் தான். மதத்தை வைத்து குண்டு போடுபவர்களுக்கு கிடையாது. ஏன் ஜிகாத் பற்றி எதாவது ஒரு வீடியோ போடுங்க பார்ப்போம். இந்துக்கள் மட்டும் இலகுவானர்கள். யாருக்காக இதை பண்ணுகிறீர்கள். முற்போக்கு சிந்தனை என்று சொன்னால் நான் ஏற்க மாட்டேன், எல்லாம் ஓட்டுக்காக. அடுத்த ஆண்டு ஆட்சியை பிடிக்க இந்த வேலை நடக்கிறது.



70 ஆண்டுகளாக இதை தான் செய்கிறீர்கள். ஏன் உங்கள் ஆட்சி காலத்தில் ஜாதியை ஒழிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் இப்படி இந்துக்களை திட்டினால் ஓட்டு விழுந்துவிடும், அதானே. எல்லாம் அரசியல் தான். உங்களை சொல்லி குற்றமில்லை. ஓட்டு போடுபவர்களை சொல்லனும். அவுங்க கடவுளை, ஏன் தமிழ் கடவுளையே திட்டினால் கூட அதைப்பற்றி கவலைப்படாமல், இதை ஏன் பேசணும் ஓட்டு போடுகின்றனர்.

தமிழர்களின் ஓட்டு வேண்டும் ஆனால் அவர்கள் வணங்கும் கடவுள்கள் கூடாது. இனிமேலாவது அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வேண்டும் என அந்த முருகனிடமே வேண்டுகிறேன். இனிமேலாவது தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள் கொஞ்சம் முழித்து கொள்ளுங்கள், என்ன நடக்கிறது என பாருங்க. இத்தனை ஆண்டுகள் நம்மை கேவலப்படுத்தி பேசினார்களே, அந்த அரசியல்காரர்களை நாம் எதிர்ப்போம். அதற்கு தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement
கருத்துகள் (75) கருத்தைப் பதிவு செய்ய
மேக்னா ராஜ் குடும்பத்தில் சோகம்: நடிகர் துருவாவுக்கும், மனைவிக்கும் கொரோனாமேக்னா ராஜ் குடும்பத்தில் சோகம்: ... சினிமாவில் சாதிக்க துடிக்கும் கருப்பு நிறத்தழகி செம்மலர் அன்னம் சினிமாவில் சாதிக்க துடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (75)

Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
18 ஜூலை, 2020 - 09:52 Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) மதச்சார்பின்மை பேசியதற்கே ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார், கோவையில் பாரூக் நாத்திகம் பேசியதற்கே கொல்லப்பட்டார். கொழும்புவில் தமிழர்கள் குண்டுவைத்து கொல்லப்பட்டபொழுது கூட இந்த நாத்திகர்கள் வாய் திறக்கவில்லை. இந்துக்கள் அப்படி கொலை செய்வதில்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் பேசுகிறார்கள்..
Rate this:
devendran - Tuticorin,இந்தியா
18 ஜூலை, 2020 - 01:32 Report Abuse
devendran முருகனை சுப்ரமணியன்னு சொல்லி எங்களை ஏமாத்தினது நீங்க தான். செந்தில் ஐயர் , முருகன் ஐயங்கார் ன்னு ஒருத்தன் இருக்கானா சொல்லுங்க? உங்களுக்கு இவங்க மேல வன்மம். அவ்ளோ தான் . உங்க வீட்டுல யாருக்காவது வேலு , வள்ளி ன்னு பெரு வைப்பீங்களா?
Rate this:
கருப்பட்டி சுப்பையா (DMK திரும்ப வந்தா நாடு நாசமா போகும் ) - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி ,இந்தியா
17 ஜூலை, 2020 - 11:33 Report Abuse
கருப்பட்டி சுப்பையா (DMK திரும்ப வந்தா நாடு நாசமா போகும் ) அந்த காலத்துலயே இந்த ராம்சாமியயும் இப்படி கேஸ் எல்லாம் போட்டு, அப்பவே ஒழுங்கா எதிர்ப்பைக் காட்டி இருந்தா, இந்த கருப்பர் கூட்டத்தைப் போல அவரும் தாடியயும், மீசையயும் எடுத்துட்டு ஓடி ஒளிஞ்சிருப்பார். மிஸ் ஆயிடுச்சு.
Rate this:
Magesh Kumar - Madurai,இந்தியா
17 ஜூலை, 2020 - 11:10 Report Abuse
Magesh Kumar வரக்கூடிய எலெக்ஷன்ல அனைவரும் திராவிட கட்சிகளுக்கு வாக்கு அளிக்க கூடாது .அதுதான் நம்மளோட ஒற்றுமையை காமிக்கும் தருணம் .அது மட்டுமே எதிர்காலத்தில் நம்ம மீது கைவைக்க யோசிப்பார்கள் .
Rate this:
kannan rajagopalan - Chennai,இந்தியா
17 ஜூலை, 2020 - 10:50 Report Abuse
kannan rajagopalan இதெல்லாம் வேற்று மதத்தினரின் ...யில் வாழ்கிறவனுக்கு உரைக்கவா போகிறது. இந்துக்கள் ஒன்றுபட்டு அடுத்த தேர்தலில் எல்லா தொகுதியிலும் தோற்கடிக்க வேண்டும். இந்த வெறுப்பர்கள் பேச்சுக்கு விளம்பரம் தேவையில்லை. நமது ஒற்றுமையில் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் இருக்கிறது.
Rate this:
மேலும் 70 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in