18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் | 'யாக்கை திரி'க்காக கொல்கத்தா வந்துசேர்ந்த பரத் |
பாலிவுட் நடிகர் சல்மான் கானை பொறுத்தவரை மான்வேட்டை, கார் ஆக்சிடன்ட் என ஏதாவது சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்குவது வழக்கம் தான்.. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டு இறந்ததை தொடர்ந்து சல்மான் கான் உள்ளிட்ட வாரிசு நட்சத்திரங்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இதையடுத்து டுவிட்டரில் சல்மான் கானை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது.
இந்தநிலையில் தனது பண்ணை வீட்டில் தற்போது தங்கியிருக்கும் சல்மான் கான் தனது உடல் முழுக்க சேறு அப்பியிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு “அனைத்து விவசாயிகளுக்கும் மரியாதை செலுத்துகிறேன்” என்கிற கேப்சனுடன் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஏகப்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. விவசாயி ஆக தான் மாறியதாக காட்டிக்கொண்டு இதன்மூலம் சமீப நாட்களாக தன் மீது பரவியிருக்கும் நெகடிவ் இமேஜை உடைக்கலாம் என நினைத்தாரோ என்னவோ, ஆனால் அவர் நினைத்தற்கு மாறாக கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து வர ஆரம்பித்துள்ளன.
உடலில் சேற்றை தடவிக் கொண்டு எதற்காக விவசாயி போல வேஷம் போடுகிறீர்கள்.. அந்த சேற்றை கூட உங்களால் சரியாக தடவிக் கொள்ள முடியவில்லையே” என்று கிண்டலடிக்கின்றனர் பலரும். நீங்கள் நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள் என்றும் சுஷாந்தின் ஆன்மா உங்களை வேட்டையாடும் என்றும் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.