பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
நடிப்பு, இயக்கம், திரைப்படத் தயாரிப்பு என அந்தக்காலத்திலேயே பன்முக திறமையை வெளிப்படுத்தியவர். டி.ஆர்.சுந்தரம். தமிழ்நாட்டிலுள்ள சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு அரங்கையும் நிறுவனத்தையும் நிறுவியவர் ஆவார். தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இதுவே. சினிமாவில் பல புதுமைகளை புகுத்திய பெரும் சுந்தரத்திற்கு உண்டு. இவரின் 114வது பிறந்த தினம் இன்று. இவரைப்பற்றிய பல்வேறு சுவாரஸ்யங்கள் தெரிந்திருந்தாலும் அவற்றில் ஒன்றை இப்போது பார்க்கலாம்.
அந்தக்காலத்தில் பெண்கள் சினிமாவில் நடிப்பதே ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. அதுவும் சேலையை இழுத்து போர்த்திக் கொண்டு ஆண்களை தொடாமல் நடித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் தான் கவர்ச்சி நடிகையை அறிமுகப்படுத்தி தமிழ்நாட்டையே அதிர வைத்தார் மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம்.
வெளிநாட்டில் நெசவு தொழில்நுட்பம் படித்து விட்டு வந்த டி.ஆர்.சுந்தரத்திற்கு சினிமா மீது தான் மோகம். படம் எடுக்க மும்பைக்கு அலைய வேண்டியது இருக்கிறதே என்று சேலத்தில் சொந்தமாக மார்டன் தியேட்டர்ஸை கட்டினார். 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி, அப்போதைய சேலம் மாவட்ட கலெக்டர் ராமூர்த்தி திறந்து வைத்தார்.
தன் சொந்த ஸ்டுடியோவில் 1937 ஆம் ஆண்டு, தனது முதல் படமான சதி அகல்யாவை எடுத்தார். இந்தப் படத்திற்காக சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார் சுந்தரம். படத்தை பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிவிட்டு. இந்த பெண் தான் படத்தில் நடிக்கப் போகிறார். இவர் சிங்களத்தை சேர்ந்த தவமணிதேவி என்ற அந்த நடிகையின் படத்தை பத்திரிகையாளருக்கு கொடுத்தார். படத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் மயங்கி விழாத குறைதான். காரணம் அதில் தவமணிதேவி நீச்சல் உடையில் இருந்தார்.
இது சாத்தியமே இல்லை. இப்படி ஒரு பெண் நடிக்கவே மாட்டாள் என்று பத்திரிகையாளர்கள் கூறினார்கள். அப்போது சுந்தரம் "வாம்மா தவமணிதேவி" என்று அழைத்து பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் மினி ஸ்கர்ட், டீ சர்ட் அணிந்து மேற்கத்திய பெண் போல இருந்தார். படம் அமோக வசூலை குவித்து வெற்றி கண்டது. தமிழ்சினிமாவின் முதல் கவர்ச்சி நடிகையானார் தவமணி தேவி.