அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா | கேஜிஎப் 2 - அதிக விலை கேட்கும் தயாரிப்பாளர்கள் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள திரையுலகை சேர்ந்த பெண் இயக்குனர் விது வின்சென்ட் என்பவர், தான் உறுப்பினராக இருந்து வந்த சினிமா பெண்கள் நல அமைப்பிலிருந்து விலகியதுடன் அதில் உள்ள சிலர் மீது நிறைய குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.. குறிப்பாக நடிகை பார்வதி தன்னை அவமதித்து விட்டதாக அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.. அந்த சமயத்தில் பொத்தாம் பொதுவாக பார்வதி பதில் கூறியிருந்தாலும் தற்போது ராஜினாமா கடிதத்தில் தன்னைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பதால் இதன் பின்னணி குறித்து மிக நீண்ட விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார் பார்வதி.. அதன் சாராம்சம் இதுதான்..
சினிமா பெண்கள் நல அமைப்பில் இருப்பதாலோ என்னவோ பார்வதியிடம் ஒரு கதையை சொல்லி கால்ஷீட் வாங்கி விடலாம் என நினைத்துள்ளார் இயக்குனர் விது வின்சென்ட். அதுபற்றி பார்வதியிடம் ஆரம்பத்தில் பேசியுள்ளார்.. அப்போது சில படங்களில் நடித்து வந்ததால் கொஞ்ச காலம் போகட்டும் என பார்வதி கூறியுள்ளார்.. அந்த சமயத்தில், தான் நடித்துவந்த மை ஸ்டோரி மற்றும் கூடே என்கிற இரண்டு படங்களையும் பார்வதி முடித்து விட்டதால் மீண்டும் அவரிடம் கதை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் விது வின்சென்ட்.. ஆனால் அந்த சமயத்தில் பார்வதி, மம்முட்டி நடித்த கசபா படம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறியதால் அவருக்கு திரையுலகில் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் சிறிது நாட்கள் சினிமாவை விட்டு விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.. அதன்படி அவரும் புதிய பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார்.
இதன் பிறகு ஏற்கனவே தான் ஒப்புக்கொண்ட உயரே, வைரஸ் ஆகிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார் பார்வதி. இதை தொடர்ந்து தன்னுடைய படத்தில் ஏன் நடிக்க மறுக்கிறீர்கள் என விது வின்சன்ட் கேட்கவே சரி இனியும் தாமதப்படுத்த வேண்டாம் என அவரை தான் நடித்துவந்த உயிரே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து கதை சொல்லும்படி சொன்னார் பார்வதி. பொதுவாக படப்பிடிப்பு தளத்தில் கதை கேட்பதில் அவருக்கு உடன்பாடில்லை என்றாலும் இனியும் தாமதப்படுத்த வேண்டாம் என்பதற்காக அப்படி வர சொன்னார்.. வித்து வின்சன்ட்டும் படத்தின் கதாசிரியரும் அந்த கதையை கூறியபோது அதில் பார்வதிக்கு உடன்பாடு ஏற்படவில்லை.. இருந்தாலும் பத்து நாட்கள் கழித்து விளக்கம் சொல்கிறேன் என அவர்களை அனுப்பி வைத்தவர் அடுத்த சில நாட்களிலேயே அந்த படம் தனக்கு செட்டாகாது என்று கூறியுள்ளார்..
விது வின்சன்ட்டும் ஓகே உங்களுடைய மனநிலை புரிகிறது என்று கூறி நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டார்.. அதன் பிறகு அந்த படத்தை ஸ்டாண்ட் அப் என்ற பெயரில் ஆரம்பித்து வேறு இரண்டு ஹீரோயின்கள் வைத்து படத்தை முடித்து ரிலீஸ் செய்தும் விட்டார்.. ஆனால் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேட்டி கொடுக்கும் போதுதான் பார்வதி இந்த படத்தில் நடிக்க மறுத்ததாகவும் தன்னை உதாசீனப்படுத்தியதாகவும் சொல்வதை கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைந்தார்.. அந்த பேட்டியில் கொடுக்கப்பட்ட தலைப்புகள் பார்வதியை குற்றம்சாட்டுவது போல இருக்க, இதுகுறித்து விது வின்சென்ட்டிடம் விளக்கம் கேட்டுள்ளார் பார்வதி..
அது தான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டு அவர்கள் வைத்த தலைப்புகள் என்றும் அது பற்றி தனக்கு தெரியவில்லை என்றும் கூறிய அப்போது பார்வதியிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் விது வின்சென்ட். ஆனால் திடீரென இப்போது அவர் சினிமா பெண்கள் நல அமைப்பில் இருந்து விலகியவுடன் பார்வதியையும் குற்றம் சாட்டி அவர் குறிப்பிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில், ஏற்கனவே அவர் பார்வதியிடம் காட்டிய நட்புக்கான எந்த இலக்கணமும் அதில் காணப்படவில்லை” என வருத்தத்துடன் விளக்கம் அளித்துள்ளார் பார்வதி