Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண்ணுடன் முத்தக்காட்சியில் நித்யா மேனன்: ரசிகர்கள் அதிர்ச்சி

15 ஜூலை, 2020 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Nithya-Menon-liplock-with-girl-:-Fans-shocking

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் கடைசியாக 'சைக்கோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

நித்யா மேனன் நடித்துள்ள 'பிரீத் - இன் டு த ஷேடோஸ்' என்ற ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்று சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. அதன் இரண்டாவது எபிசோடில் நித்யா மேனன் மற்றொரு நடிகையான ஸ்ருதி பாப்னா என்பவருடன் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார்.

ஒரு காருக்குள் இருவரும் இப்படி முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி சுமார் 40 வினாடிகள் வரை உள்ளது. அதற்கடுத்து சில வினாடிகள் அவர்கள் இருவரும் ஆடைகளைக் களைந்து கட்டிப்பிடிப்பது போன்ற காட்சிகளும் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தான் நடிக்கும் படங்களில் கிளாமராகக் கூட ஆடை அணிய மறுக்கும் நித்யா மேனன் இப்படிப்பட்ட ஒரு காட்சியில் நடித்திருப்பது வியப்பாக உள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஓடிடி தளங்களில் வரும் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லாத காரணத்தால்தான் இம்மாதிரியான காட்சிகள் வருகின்றன. இவையே திரைப்படத்தில் வந்திருந்தால் அந்தக் காட்சிகளை தணிக்கைக் குழுவினர் வெட்டி எறிந்திருப்பார்கள் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இப்படி ஆபாசம், வன்முறை, கடவுள் சர்ச்சை ஆகியவை இருந்தால்தான் ஒரு பரபரப்பான விளம்பரம் கிடைக்கிறது என ஓடிடி நிறுவனங்களும் இப்படிப்பட்ட தொடர்களை அதிகம் வெளியிடுகின்றன என்ற கருத்தும் உள்ளது.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
அஞ்சலியின் விருப்பம்!அஞ்சலியின் விருப்பம்! கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு : உள் நோக்கம் உள்ளது : ராஜ்கிரண் கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு : உள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
22 ஜூலை, 2020 - 09:09 Report Abuse
Bala Murugan இவற்றை பார்க்கும்பொழுது சினிமாவே ஒழியணும் னு இருக்கு. நடிகைகளே வேண்டாம். விஜய் உடன் நடித்த பொண்ணுங்க எல்லாம் ... என்று இருக்கும்போது மனம் கொதிக்குது. சினிமாவை ஒழித்து விடுங்கள். நடிகர்களுக்காகக் கூட சினிமா வேண்டாம். பணத்துக்காக எதுவும் செய்ய துணிவார்கள்.
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
16 ஜூலை, 2020 - 08:59 Report Abuse
M.Sam பெயர் பாட்டி போல
Rate this:
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
16 ஜூலை, 2020 - 06:40 Report Abuse
Sankare Eswar நைஸ் டு மீட் யு
Rate this:
Girija - Chennai,இந்தியா
16 ஜூலை, 2020 - 00:18 Report Abuse
Girija பணத்திற்காக எதையும் செய்யும் இவர்களுக்கு சாதி பெயர் எதுக்கு ? சாதி சங்கங்கள் இதை தட்டி கேட்கவேண்டும் .
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
15 ஜூலை, 2020 - 23:43 Report Abuse
தல புராணம் இப்படி பரபரப்பான ஆபாசமான படங்களை விளம்பரம் பண்ணியே சில பத்திரிக்கைகள் கூட்டத்தை கூட்டுகின்றன, அப்படித்தானே மலரே?
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in