துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
தமிழகத்தில் ஒரு கூட்டம் வேண்டுமென்றே இந்து மதத்தை பற்றியும், இந்து மதக் கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். அதில் கறுப்பர் கூட்டம் என யு-டியூப் தளம் சமீபத்தில் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் தொடர்பாக அவதூறு பரப்பி வருகின்றனர். இதற்கு நடிகர்கள் நட்டி எனும் நட்ராஜ் சுப்ரமணியம் மற்றும் பிரசன்னா ஆகியோர் சமூகவலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நட்ராஜ் சுப்ரமணியம் டுவிட்டரில், போங்கடா முட்டாளுங்களா... முருகனை பத்தி சொல்ல, சிவனாலேயே முடியாதுடா.. என் ஜபம், கந்தர்ஷஷ்டி கவசம் என்னை காக்கும். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது... சரவணபவாய நமஹ... வெற்றிவேல் வீரவேல் என பதிவிட்டுள்ளார். மேலும் இவரை வசைபாடியவர்களுக்கும் செம பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் பிரசன்னா டுவிட்டரில், எவரும் எவருடைய நம்பிக்கையையும் ஓரளவு கடந்து விமர்சிக்கிறேனென்று கொச்சைப்படுத்துவது பெரிதாய் பேசப்படும் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரை ஏன் கேட்பதில்லை எங்கிற வாதமும் பயன்தாராது. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு பெரிது. அதை மதிக்க தெரியாத போக்கிரிகள் யாராயினும், எவருக்கெதிராயினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும். மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மதநம்பிக்கையினும் அதிமுக்கியம் என பதிவிட்டுள்ளார்.